ரிஷப் பண்ட்டா? தினேஷ் கார்த்திக்கா? யாருக்கு ஆடும் அணியில் இடம்? – கவுதம் கம்பீர் பளிச் பதில்!

0
163
Gambhir

இந்த வாரத்தின் முதல் நாளில், அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி இந்திய தேர்வுக் குழுவால் அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட அணியை அறிவித்ததோடு, ரிசர்வு வீரர்களாக நான்கு வீரர்களையும் அறிவித்தார்கள்!

இந்த அணியில் இடதுகை பேட்ஸ்மேன்களாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்பின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் இருவர் மட்டும் தான் இருக்கிறார்கள். இந்திய அணியில் இவர்களைத் தவிர இடதுகை பேட்ஸ்மேன் என்று யாருமில்லை.

- Advertisement -

தற்போது இந்திய அணிக்கு பிரச்சனையாக இருப்பது இரண்டு விஷயங்கள். மிடில் ஓவர்களில் வீசப்படும் லெக் ஸ்பின் மற்றும் லெப்ட் ஹேண்ட் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின் இந்த இரண்டையும் தாக்கி ரன்கள் கொண்டுவர, மிடில் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன் வேண்டும். இதற்கு ரிஷப் பண்ட் மட்டும்தான் இருக்கிறார். ஆனால் இவரை அணிக்குள் வைத்தால், பினிஷிங் ரோலில் வருகின்ற தினேஷ் கார்த்திக்கை அணிக்குள் வைக்க முடியாத நிலைமை இருக்கிறது. அதே சமயத்தில் ரிஷப் பண்ட்டின் டி20 பேட்டிங் சீரற்ற முறையில் இருக்கிறது.

ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரையும் ஒரே அணியில் வைப்பதற்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் ஆடும் லெவனில் இடதுகை பேட்ஸ்மேன் தேவைக்காக ரிஷப் பண்ட்டா? இல்லை பினிஷிங் ரோல் செய்வதற்கு தினேஷ் கார்த்திகா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

தற்போது இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இடம் கேட்கப்பட்ட பொழுது ” இருவரையும் அணிக்குள் உங்களால் வைக்க முடியாது. அப்படி வைக்கும் பொழுது நீங்கள் ஆறாவது பந்து வீச்சாளரை இழக்க வேண்டியது வரும். உலகக் கோப்பை தொடரில் 6வது பந்துவீச்சாளர் இல்லாமல் போக முடியாது. உங்களுக்கு ஆட்டத்திற்கு கட்டாயம் பந்துவீச்சில் ஒரு பேக்கப் வீரர் தேவை. இதற்காக உங்களால் சூரியகுமார் யாதவை கைவிட முடியாது. அதே சமயத்தில் கே எல் ராகுல் உலகக்கோப்பையில் மோசமாக செயல்பட்டால் ரிஷப் பண்ட் துவக்க வீரராக வருவதற்கு வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” எனது ஆடும் அணியில் ரிஷப் பண்ட் கட்டாயம் இருப்பார். அதேபோல் மிடில் வரிசையில் ஒரு இடது கை வீரர் வேண்டும் என்கிற கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. மேலும் இந்தியா போன்ற ஒரு அணிக்கு இது சரியல்ல. எந்த ஒரு வீரருக்கும் ஆட்டத்தை வெல்லும் திறன் இருக்க வேண்டும். இந்தத் திறன் ரிஷப் பண்ட்க்கு இருக்கிறது. எனவே ஐந்தாம் இடத்தில் பண்ட் ஆறாம் இடத்தில் ஹர்திக் பாண்டியா ஏழாம் இடத்தில் அக்ஷர் படேல் எட்டாம் இடத்தில் அஸ்வின் அதைத்தொடர்ந்து 3 வேகப்பந்து வீச்சாளர்கள் என்று போக முடியுமா என்று நீங்கள் பார்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்!