இந்திய கிரிக்கெட்

ஹாட்ரிக் சிக்ஸர்.. 48 பந்தில் ரிங்கு சிங் ருத்ர தாண்டவம்.. மிரட்டல் பேட்டிங்.. கம்பீருக்கு மகிழ்ச்சியான செய்தி..

நேற்று உத்தர பிரதேஷ் டி20 லீக் தொடரில் இந்திய வீரர் ரிங்கு சிங் அபாரமாக விளையாடி சதம் அடித்து தனது அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார். மீண்டும் பேட்டிங் ஃபார்முக்கு அவர் திரும்பியது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல செய்தியாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசியக் கோப்பை டி20 இந்திய அணியில் ரிங்கு சிங் சேர்க்கப்பட மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அவருடைய பெயர் இடம் பெற்றது. இந்த நிலையில் சில காலமாக பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் இருந்து வந்தார். எனவே அவரது தேர்வும் விமர்சிக்கப்பட்டது.

உத்தர பிரதேஷ் டி20 லீக்

கடந்த வாரத்தில் உத்தர பிரதேஷ் டி20 லீக் தொடர் துவங்கியது. இதில் நேற்று துருவ் ஜுரலின் கோரக்பூர் லயன்ஸ் மற்றும் ரிங்கு சிங்கின் மீரட் மார்விக்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கோரக்பூர் லயன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரராக வந்த கேப்டன் துருவ் ஜுரல் 32 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதைத் தொடர்ந்து இறுதிக் கட்டத்தில் நிஷாந்த் குஸ்வாகா 24 பந்தில் 37 ரன்கள், சிவம் சர்மா 14 பந்தில் 25 ரன்கள் அதிரடியாக எடுத்தார்கள். இதனால் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்தது. விஷால் சவுத்ரி மற்றும் விஜயகுமார் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

ரிங்கு சிங் ருத்ரதாண்டவம்

இதைத்தொடர்ந்து களமிறங்கிய மீரட் மார்விக்ஸ் அணி 38 ரன்னுக்கு முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இதை தொடர்ந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு வந்த கேப்டன் ரிங்கு சிங் ஒரு முனையில் தனது வழக்கமான ஆட்டத்தை விளையாடினார். இன்னொரு முனையில் அவருக்கு சகாப் யுவராஜ் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஐயருக்கு எந்த பதவியும் கிடையாது.. ODI கேப்டன் இவர்தான்.. பிசிசிஐ செயலாளர் திட்டவட்டம்

அபாரமாக விளையாடிய ரிங்கு சிங் வேகமாக அரை சதம் கடந்து 19ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறக்கவிட்டு சதம் அடித்தார். இறுதிவரை களத்தில் நின்ற அவர் 48 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்கள் உடன் 108 ரன்கள் குவித்தார். அவருடன் இணைந்து விளையாடிய சகாப் யுவராஜ் பொறுப்பாக 22 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். இறுதியாக மீரட் மார்விக்ஸ் அணி 18.5 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிங்கு சிங் பேட்டிங் ஃபார்முக்கு திரும்பி வந்து இருப்பது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

- Advertisement -
Published by