20ஆவது ஓவரின் கிங் தல தோனி தான்.. அவரின் சாதனையை முறியடித்த ரிங்கு சிங்!

0
377

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 29 ரன்களை தேவைப்பட்டபோது, 5 சிக்ஸர்கள் அடித்து கொல்கத்தா அணிக்கு வெற்றிகரமாக சேஸ் செய்து கொடுத்தார் ரிங்கு சிங். இதன் மூலம் தோனியின் சாதனையை முறியடித்து இருக்கிறார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 24 ரன்கள் குவித்தது. தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் இருவரும் அபாரமாக விளையாடியிருந்தனர்.

- Advertisement -

205 ரன்கள் எனும் சற்று கடினமான இலக்கை சேஸ் செய்த கொல்கத்தா அணி, ராணா மற்றும் வெங்கடேஷ் ஐயரின் சிறப்பான ஆட்டத்தால் கிட்டத்தட்ட 16 ஓவர்கள் வரை ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தது.

கடைசி 4 ஓவர்களில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டபோது ரஷித் கான் உள்ளே வந்து ஹாட்ரிக் விக்கெட் எடுத்து கதிகலங்க வைத்தார். மெல்ல மெல்ல ஆட்டம் குஜராத் அணியின் பக்கம் இருந்தது.

கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவை என்று இருந்தபோது, ரிங்கு சிங் அடுத்தடுத்து 5 சிக்ஸர்கள் விளாசி, போட்டியின் கடைசி பந்தில் கொல்கத்தா அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இந்த வெற்றியை பலரும் கொண்டாடப்பட்டு வருகிறது.

- Advertisement -

கடைசி ஓவரில் 29 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்ததன் மூலம் தோனியின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்திருக்கிறார் ரிங்கு சிங்.

கடைசி ஓவரில் அதிகபட்ச டார்கெட் செய்த அணிகள்

  1. 29 ரன்கள் – கொல்கத்தா vs குஜராத் – 2023
  2. 23 ரன்கள் – ரைஷிங் புனே vs பஞ்சாப் – 2016
  3. 22 ரன்கள் – குஜராத் vs ஹைதராபாத் -2022

2016 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது, ரைஷிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டது. அக்ஸர் பட்டேல் வீசிய அந்த ஓவரை களத்தில் இருந்த தோனி, சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக விளாசி வெற்றிகரமாக சேஸ் செய்து முடித்தார்.

இத்தனை வருடங்களாக இதுதான் கடைசி ஓவரில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட ஸ்கோராக முதல் இடத்தில் இருந்தது. நேற்றைய போட்டியில் ரிங்கு சிங் 29 ரன்கள் சேஸ் செய்து இந்த சாதனையை முறியடித்து இருக்கிறார். கொல்கத்தா அணி ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இந்த அசாத்தியமான கடைசி ஓவர் வெற்றியை பெருமிதமாக கொண்டாடி வருகின்றனர்.