ரிங்கு சிங் சிக்ஸர் அடித்தும் ரன் தரவில்லை.. பின்னணியில் உள்ள காரணம் இதுதான்!

0
27421
Rinku

உலகக் கோப்பை முடிந்து மூன்று நாட்கள் இடைவெளியில் இன்று மீண்டும் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதிக்கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி அபாரமாக விளையாடியது. அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த ஸ்மித் அரை சதம் அடித்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து மூன்றாவது வீரராக வந்த ஜோஸ் இங்லீஷ் 46 பந்தில் அதிரடியாக சதம் அடித்ததோடு 50 பந்தில் 110 ரன்கள் குவித்து மிரட்டினார்.

இந்த இருவரும் வெளிப்படுத்திய பொறுப்பான மற்றும் அதிரடியான பேட்டி காரணமாக ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழந்து 208 ரன்கள் 20 ஓவர்கள் முடிவில் குவித்தது.

இதற்கடுத்து விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் ரன் ஏதும் இல்லாமலும், ஜெய்ஸ்வால் 21 ரன்னிலும் வெளியேறினார்கள்.

- Advertisement -

இப்படியான நெருக்கடி நேரத்தில் ஜோடி சேர்ந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் இசான் கிஷான் இருவரும் அபாரமாக விளையாடினார்கள். இசான் கிசான் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சூரியகுமார் யாதவ் இறுதி நேரத்தில் 80 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

கடைசி ஆறு பந்தில் ஏழு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் இரண்டு பந்துகளில் ரிங்கு சிங் ஐந்து ரன்கள் எடுத்தார். வெற்றிக்கு நான்கு பந்தில் இரண்டு ரன்கள் மட்டுமே தேவைப்பட, அக்சர் படேல் ஆட்டம் இழக்க, கடைசி இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் என்று மாறியது.

இந்த நிலையில் ரிங்கு சிங் ஆட்டத்தின் ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க முயற்சி செய்தார். இதில் அர்ஸ்தீப் சிங் ரன் அவுட் ஆனார். இதனால் கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. இந்த நிலையில் கடைசிப் பந்தை சிக்ஸருக்கு அபாரமாக ரிங்கு சிங் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

ஆனால் அவர் அடித்த சிக்சர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஏனென்றால் பந்து நோபால் ஆக இருந்தது. அந்த இடத்திலேயே ஆட்டம் முடிந்து விட்ட காரணத்தினால், மேற்கொண்டு அவர் அடித்த சிக்சர் தேவைப்படவில்லை.

எனவே கிரிக்கெட் விதிப்படி அந்த ஆறு ரன்கள் கணக்கில் கொண்டுவரப்படவில்லை. ஆனாலும் பினிஷராக ரிங்கு சிங் அபாரமாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!