இந்திய கிரிக்கெட்

நிதிஷ் ராணா கொடுத்த பார்ட்டியில் கடவுள் திட்டம் வந்தது.. எனக்கு இடம் கிடைத்தது இப்படித்தான் – ரிங்கு சிங் பேட்டி

ரிங்கு சிங் அடிக்கடி பயன்படுத்தும் கடவுளின் திட்டம் என்கின்ற விஷயம் எங்கிருந்து ஆரம்பித்தது என்பது குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் கடைசி ஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள் அடித்து கொல்கத்தா அணியை வெல்ல வைத்ததின் மூலமாக வெளி உலகத்திற்கு ரிங்கு சிங் அடையாளம் காணப்பட்டார். அந்த செயலை அவர் கடவுளின் திட்டம் என்று குறிப்பிட்டிருந்தார்.

மோசமான சூழ்நிலை

ரிங்கு சிங் கொல்கத்தா அணிக்கு தொடர்ந்து வாங்கப்பட்டாலும் கூட இரண்டாவது முறை வாங்கப்பட்ட பொழுது மிகவும் குறைவான விலைக்கு வாங்கப்பட்டார். அவருக்கு விளையாடுவதற்கு அணியில் வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. ஏற்கனவே அவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் இருந்து வந்தது.

இப்படியான நிலையில் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க அதை மிகவும் சிறப்பான முறையில் அவர் பயன்படுத்திக் கொண்டார். ஐந்து சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்ததின் மூலமாக இந்திய அணிக்கும் தேர்வானார். இது அனைத்துமே கடவுளின் திட்டம் என்று ரிங்கு சிங் எல்லா இடங்களிலும் கூறி வந்தார். அப்போது இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

கடவுளின் திட்டம் ஆரம்பித்தத

இதுகுறித்து ரிங்கு சிங் பேசும்பொழுது “நிதிஷ் ராணா பாய் உடன் சேர்ந்து ஒரு பார்ட்டிக்கு போயிருந்தோம். அங்கு நிதிஷ் ராணா பாய் ஒரு பாடல் பாடினார். அந்தப் பாடலில் கடவுளின் திட்டம் என்கின்ற வார்த்தை இருந்தது. அந்த பார்ட்டி முடிந்தவுடன் அவர் என்னிடம் இந்த பாடலின் அர்த்தம் கடவுளை எப்பொழுதும் நம்பு என்பதாகும் என்று விளக்கினார். அங்கிருந்துதான் எனக்கு கடவுளின் திட்டம் ஆரம்பித்தது”

இதையும் படிங்க : பும்ராவை எதுக்கு ஆட வைக்கணும் மேன்?.. லாஜிக் படி பண்ற பழக்கம் உங்களுக்கு இல்ல – அஜய் ஜடேஜா விமர்சனம்

“நாம் யாரையும் தவறாக நினைக்காமல் நாம் நம்முடைய வேலையில் கவனம் செலுத்தி உழைத்தால் கடவுள் நமக்கு தர வேண்டியதை தருவார். இன்னொருவர் நன்றாக விளையாடுகிறார் என்று நாம் அவர் குறித்து பொறாமைப்பட்டால், நம்முடைய ஆட்டம் பாதிப்படைந்து விடும். அதுவே நாம் மற்றவர் குறித்து நல்லதாக நினைக்கும் பொழுது மேலே இருக்கும் கடவுள் நமக்கு நல்லதை நினைப்பார். இப்படித்தான் இருந்து வருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Rinku Singh

Recent Posts