பும்ராவை எதுக்கு ஆட வைக்கணும் மேன்?.. லாஜிக் படி பண்ற பழக்கம் உங்களுக்கு இல்ல – அஜய் ஜடேஜா விமர்சனம்

0
30
Bumrah

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இன்று இந்திய அணி துபாய் மைதானத்தில் யுஏஇ அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டி குறித்து இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா அதிரடியான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் மூலமாக ஆசியக் கோப்பை தொடர் தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று இந்தியா அணிக்கு எதிராக விளையாடுகிறது. சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் தற்போது ஆசிய பெரிய அணிகள் அனைத்துமே பலமாக காணப்படுகின்றன.

- Advertisement -

பும்ரா பிரச்சனை

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டிய கட்டாயம் உருவானதால் அவர் மீண்டும் காயமடைந்தார். இன்னொரு முறை பொதுக்கு பகுதியில் அவர் காயமடைந்து ஆபரேஷன் செய்தால் அத்துடன் அவர் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக பும்ராவுக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் அவருக்கு காட்டப்படும் இந்த சலுகை இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதானால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. அப்போது இது குறித்து அஜய் ஜடேஜா விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

உங்களுக்கு லாஜிக்கே தெரியாது

இதுகுறித்து அஜய் ஜடேஜா பேசும்பொழுது “யுஏஇ அணிக்கு எதிராக பும்ராவை ஆட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது மேன்? வழக்கமாக நீங்கள் அவரை கம்பளி போர்த்தி பாதுகாப்பாகத்தான் வைக்கிறீர்கள். இப்போது இந்த சிறிய அணிக்கு எதிராகவும் அவர் உங்களுக்கு தேவையா? ஒன்று பும்ராவை பாதுகாக்க வேண்டாம். இல்லையென்றால் இப்படியான போட்டிகளில் ஆட வைக்காமல் பாதுகாக்க வேண்டும். லாஜிக் இதைத்தான் சொல்லும் ஆனால் நாம் லாஜிக்கோடு செய்ய மாட்டோம்”

இதையும் படிங்க : நமக்கிட்ட யுவராஜ் சிங் அப்டேட் வெர்ஷன் இருக்கு.. பாகிஸ்தானுக்கு கடைசி இடம் தான் – அஸ்வின் கருத்து

மேலும் இதுபற்றி பேசியிருந்த இர்பான் பதான்”பும்ராவை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட வந்துவிட்டு பிறகு பதுங்கி கொள்வதில் நியாயம் கிடையாது. நீங்கள் உங்களுடைய மீட்சிக்காகவோ அல்லது நிர்வாகத்திற்காகவோ விளையாட வரவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -