“ஐபிஎல்-காக சாக்கு.. இசான் கிசானை தேர்வு செய்யாதது சரியான முடிவு” – பாகிஸ்தான் கம்ரன் அக்மல் பேச்சு

0
111
Ishaan

தென் ஆப்பிரிக்க இந்திய அணியின் சுற்றுப்பயணத்தில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இசான் கிஷான் இடம் பெற்று இருந்தார். இறுதியாக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது அவர் அணியில் இருந்து விலகிக் கொண்டார்.

தொடர்ந்து அணிவுடன் பயணித்து வருகின்ற காரணத்தினாலும், மேலும் விளையாடும் வாய்ப்பு இல்லாமலே தொடர்ந்து அணிவுடன் இருக்கின்ற காரணத்தினாலும், ஓய்வு இல்லாததால் மனச்சோர்வு அதிகமாக இருப்பதாக கூறி, இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் ஓய்வை கேட்டு வாங்கியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்றால், அவர் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடி, தன்னை நிரூபித்து அதற்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்ப முடியும் என்பதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவரும் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ரஞ்சி கிரிக்கெட் விளையாட தயாராகி இருக்கிறார் போல.

மூத்த வீரர்கள் பலர் ஓய்வில்லாமல் விளையாடி வருகின்ற நேரத்தில், இளம் வீரர்கள் பலர் வெளியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் நேரத்தில், இஷான் கிஷான் இந்த காரணத்திற்காக வெளியேறியது பிசிசிஐயை அதிருப்திக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இஷான் கிசானை அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யாமல் புறக்கணித்திருக்கிறார்கள். மேலும் அதிரடியாக இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரலை தேர்வு செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து பாகிஸ்தான அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கம்ரன் அக்மல் கூறும் பொழுது “மனச்சோர்வை சமாளிப்பதற்காக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணியில் இருந்து இசான் கிஷான் விடுவிக்கப்பட்டதாக பேச்சு அடிபடுகிறது. இதே அணியில் ரோகித் சர்மா விராட் கோலி போன்ற பல முன்னணி வீரர்கள் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். இவர்கள் ஓய்வு எடுப்பதாக நான் கேள்விப்பட்டதே இல்லை.

இஷான் கிஷான் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டின் ஆரம்ப கட்டத்தில் இருக்கக்கூடிய இளம் வீரர். இந்த நேரத்தில் இவருக்கு என்ன மாதிரியான மனச் சோர்வு வந்துவிடும் என்று தெரியவில்லை.

இரண்டு மாதம் ஐபிஎல் தொடருக்காக நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்கிறீர்கள். இந்திய அணியில் விளையாடுவது மிகப்பெரிய விஷயம். இப்படி இருக்கும் பொழுது இசான் கிசான் கூறியுள்ள சாக்குப்போக்கு எனக்கு புரியவே இல்லை.

அவர் இப்பொழுது ஓய்வெடுக்கட்டும் பிறகு உள்நாட்டு கிரிக்கெட் விளையாடட்டும் என்று இசான் கிஷானை தொடர்ந்து தேர்வு செய்யாமல் புறக்கணித்து இந்திய தேர்வுக்குழு சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறது.

மேலும் மன உளைச்சல் என்கின்ற பெயரில் நாளை எந்த வீரர்களும் திடீரென இப்படி வந்து ஓய்வு கேட்க முடியாது என்பதையும் இதன் மூலம் உணர்த்தி இருக்கிறார்கள். இது ஒரு தேசியக் கடமை இங்கு நீங்கள் ஓய்வு கேட்க முடியாது” என்று அவர் கூறியிருக்கிறார்.