இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் அதில் இந்திய பேட்டிங் ஜாம்பவான் விராட் கோலி மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தினார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ரவி சாஸ்திரி மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்கள்.
விராட் கோலி மோசமான பேட்டிங் ஃபார்ம்
இந்திய கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த விராட் கோலி சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். விராட் கோலி 2021ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 31.82 பேட்டிங் சராசரியில் 1912 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்திய நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு சதம் அடித்ததோடு அந்தத் தொடர் முழுவதும் ஒரே முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் விராட் கோலி இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான ரவி சாஸ்திரி மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.
இதற்காக விராட் கோலி இருக்கணும்
இது குறித்து ரவி சாஸ்திரி கூறும் பொழுது “இந்த இந்திய அணியில் மாற்றமும் தர வரிசையில் வரும் இளம் வீரர்களும் தான் முக்கிய பங்கு வகிக்கும் என்று நினைக்கிறேன். ஜெய்ஸ்வாலுக்கு வயது 23, கில்லுக்கு வயது 22, நித்தீஷ் ரெட்டிக்கு வயது 21, ரிஷப் பண்ட் இன்னும் இளமையாக இருக்கிறார். அவருக்கு வயது 25. எனவே விராட் கோலியின் திறமையான அனுபவத்திலிருந்து பயன்பெறக்கூடிய ஏராளமான இளம் வீரர்கள் அணியில் இருக்கிறார்கள். எனவே விராட் கோலியின் அனுபவம் அவர்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:சச்சின் கோலி வரிசையில் இணைந்த பாக் கேப்டன்.. ஆசிய வீரராக அபார சாதனை.. தென்னாப்பிரிக்க தொடரில் அசத்தல்
இதுகுறித்து ரக்கி பாண்டிங் கூறும் பொழுது ” நான் விளையாட வேண்டிய நிலையை விட இரண்டு வருடங்கள் அதிகமாக ஆஸ்திரேலிய அணியில் விளையாடினேன். ஆனால் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் ஓய்வு பெற இருந்த சமயத்தில் மைக் ஹசி ஓய்வு பெற்றதால் சர்வதேச கிரிக்கெட்டில் பயிற்சியாளர் மற்றும் அணியைச் சுற்றி ஒருங்கிணைந்து ஒரு மூத்த வீரர் போல செயல்பட்டு விளையாடினேன். அது இளம் வீரர்களுக்கு உதவியாக இருந்தது” என்று ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.






