சச்சின் கோலி வரிசையில் இணைந்த பாக் கேப்டன்.. ஆசிய வீரராக அபார சாதனை.. தென்னாப்பிரிக்க தொடரில் அசத்தல்

0
150

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்திருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் சதம் அடித்து ஓரளவு ஆறுதல் படுத்தினார்.

இந்த சூழ்நிலையில் அவரது சதம் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் ஜாம்பவான்கள் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டனை இணைத்துள்ளது.

- Advertisement -

பாகிஸ்தான் கேப்டன் அபார சதம்

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி திரில்லர் வெற்றி பெற்றது. மேலும் தென்னாபிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நம்பிக்கையோடு இரண்டாவது போட்டியை தென்னாப்பிரிக்க அணி விளையாட முதல் இன்னிங்ஸில் 615 ரன்கள் குவிக்க அதற்கு பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 194 ரன்கள் மற்றும் அடுத்த இன்னிங்ஸ் 478 ரன்கள் குவித்தது.

இதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சான் மசூத் 251 பந்துகளை எதிர்கொண்டு 17 பௌண்டரிகளோடு 145 ரன்கள் குவித்தார். இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய தென்னாபிரிக்க அணி 61 ரன்கள் குவித்து இரண்டாவது போட்டியிலும் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்க தொடரில் சதம் அடித்த ஆசிய கேப்டன்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அடுத்ததாக சான் மசூத் இணைந்திருக்கிறார்.

- Advertisement -

ஜாம்பவான் வரிசையில் இணைந்த சான் மசூத்

1997 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் 254 பந்துகளை எதிர்கொண்டு 169 ரன்கள் குவித்தார். இருப்பினும் அந்தப் போட்டியில் இந்திய அணி 282 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதற்குப் பிறகு 2018ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 217 பந்துகளை எதிர்கொண்டு 15 பௌண்டரிகளோடு 153 ரன்கள் குவித்தார். இருப்பினும் அந்தப் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது.

தற்போது அதற்கு அடுத்த இடத்தில் மூன்றாவதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சான் மசூத் 145 ரன்கள் குவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேலும் நான்காவதாக இதே தென்னாப்பிரிக்க அணியில் இலங்கை அணியின் கேப்டன் கருனரத்னே 2021 ஆம் ஆண்டு 128 பந்துகளில் 109 ரன்கள் பிடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தென்னாப்பிரிக்காவில் தொடக்க வீரராக சதம் அடித்த இரண்டாவது ஆசிய கேப்டன் என்ற பெருமையையும் சான் மசூத் பெறுகிறார்.

- Advertisement -