இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் அதிரடியான ஆட்டத்தை விளையாடி அரை சதம் அடித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் விராட் கோலியின் செய்கை குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற முடிந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போனில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக உஸ்மான் கவஜா மற்றும் சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினார்கள். இதில் 6 ஓவர் வரை அமைதியாக இருந்த இந்த ஜோடி 7வது ஓவரில் சாம் தனது அதிரடியை காட்ட ஆரம்பித்தார்.
அதிலும் பும்ராவின் ஏழாவது ஓவரில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என அந்த ஓவரில் 14 ரன்களை குவித்தார். அதற்குப் பிறகு 11 வது ஓவரிலும் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 18 ரன்கள் குவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இந்த நிலையில் களத்தில் இருந்த ஷாம் மற்றும் விராட் கோலி இருவருக்கும் இடையே சிறிய உரசல் ஏற்பட, இதனை கவனித்த ரிக்கி பாண்டிங் விராட் கோலி வேண்டுமென்றே அவரை வம்புக்கு இழுத்ததாக கூறி இருக்கிறார்.
கோலி வேண்டுமென்றே செய்தார்
இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது ” களத்தில் விராட் கோலி எங்கு நடக்கிறார் என்று பாருங்கள். விராட் கோலி பேட்ஸ்மேன் நடக்கும்போது முழு ஆடுகளத்தின் வலது புறத்தில் நடந்து அந்த மோதலை உண்டாக்கி இருக்கிறார். இதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை தெளிவாக தெரிகிறது” என்று பாண்டிங் கூறியிருக்கிறார். அதாவது டிவி ரிப்ளைவில் காட்டப்பட்ட வீடியோவில் சாம் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர் முனையில் வந்த விராட் கோலி அவரை உரசுவது போல அமைய, பதிலுக்கு சாம் ஏதோ கூற அங்கு ஒரு சிறிய உரசல் உண்டானது.
இதையும் படிங்க:வெறும் 3 ரன்.. பாபர் அசாம் படைக்கப் போகும் இமாலய சாதனை.. தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்.. நாளை தொடக்கம்
இதைத்தான் ரிக்கி பாண்டிங் விராட் கோலி வேண்டுமென்று இதை செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார். தற்போது முதல் இன்னிங்ஸ் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி தற்போது ஒரு விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. தனது அறிமுக போட்டியில் விளையாடிய சாம் 60 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஜடேஜாவின் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.






