வெறும் 3 ரன்.. பாபர் அசாம் படைக்கப் போகும் இமாலய சாதனை.. தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்.. நாளை தொடக்கம்

0
417

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மட்டும் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாளை முதல் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான பாபர் அசாம் வெறும் 3 ரன்னில் ஒரு மெகா சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நிலையில் டி20 தொடரில் தோல்வி அடைந்தாலும் ஒரு நாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை செஞ்சசூரியனில் நடைபெற உள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் அணி அனுபவம் மற்றும் இளமை கலந்த அணியாக இருக்கிறது.

இதில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான பாபர் அசாம் நாளை நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ள நிலையில் வெறும் 3 ரன்னில் மெகா சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார். அதாவது பாபர் அசாம் இதுவரை 128 டி20 போட்டிகளில் விளையாடி 4223 ரன்னும், மேலும் ஒரு நாள் போட்டிகளில் 5957 ரன்னும், 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3997 ரன்னும் குவித்திருக்கிறார்.இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் குவிக்க பாபருக்கு இன்னும் மூன்று ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

- Advertisement -

பாபர் அசாம் படைக்க உள்ள மெகா சாதனை

அதனை நாளை நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் எடுத்தால் 4000 டெஸ்ட் ரன், 5000 ஒருநாள் ரன்,2000 டி20 ரன் எடுத்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை படைப்பார். பாபர் அசாம் 2015 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். மேலும் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் ஒரு வருடம் கழித்து பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமானார்.

இதையும் படிங்க:ஒரு துளி கண்ணீர் கூட வேண்டாம்.. எனக்காக இதை யாரும் செய்யக்கூடாதுனு உறுதியா இருந்தேன் – அஸ்வின் பேட்டி

மேலும் 2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணியின் அனைத்து வடிவ கேப்டனாகவும் மாறினார். ஆனால் அதற்குப் பிறகு அவரது கேப்டன்ஷிப் சரிவராத காரணத்தினால் பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகினார். இருப்பினும் ஒரு பேட்ஸ்மேனாக அணியில் விளையாடி வரும் நிலையில் எண்ணற்ற சாதனைகளை இதுபோல படைப்பார் என்று அனைத்து ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -