இந்திய நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இதுவரை பார்த்து முடியாது என்று யாரும் சொல்லக்கூடாது என ரிக்கி பாண்டிங் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இடம் பிடித்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பு கிடைக்குமா?
ஐபிஎல் தொடரில் விராட் கோலி 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்து பேட்டிங்கில் சிறப்பான நிலையில் இருக்கிறார். மேலும் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடியும் இருந்தார்.
அதேசமயத்தில் ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா காயமடைந்து அதிக போட்டிகளில் விளையாட வில்லை. தற்போது அவருடைய பார்ம் சிறப்பான முறையில் இல்லை. எனவே அடுத்தடுத்த வாய்ப்புகளை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம்.
இதைச் சொல்லக்கூடாது
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசும்போது “விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருமே போராடி சிறந்த நிலையை அடைய முயற்சிப்பது தெரிகிறது. சாம்பியன் வீரர்கள் குறித்து நான் எப்போதும் சொல்வது என்னவென்றால் அவர்களால் முடியாது என்று நீங்கள் சொல்லக்கூடாது. அவர்களை ஒதுக்கி விடக்கூடாது”
இதையும் படிங்க : எல்லாமே மோசமா நடக்குது.. நாங்க இந்த விஷயத்துல ஆரம்பத்துல இருந்தே சரியாக இல்லை – ஹர்திக் பாண்டியா வருத்தம்
“அதற்கு இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி விளையாடி வரும் விதம் முக்கியமான சாட்சி. அவர் தன்னை நிரூபித்து ரன்கள் எடுத்து வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்கிறார். இதுவரை அளவுக்கு உடல் தகுதியோடு ரோகித் சர்மா ஐபிஎல் தொடருக்கு வந்திருக்கிறார். எனவே நிச்சயமாக இவர்கள் இருவரும் 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும்.






