நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் கொல்கத்தா அணியிடம் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து அணிக்கு மீண்டும் திரும்பி வந்துள்ள கேப்டன் ஹர்திக் பாண்டியா வருத்தத்துடன் பேட்டி அளித்திருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பையின் பரிதாபம்
கடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடாத நிலையில் பும்ரா கேப்டனாக பொறுப்பேற்று இருந்தார். மேலும் இந்த போட்டியையும் வென்று இருந்தார். எனவே மும்பை கேப்டனை மாற்றி புதிய கேப்டனை கொண்டு வந்து விட்டதாக பல கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியிருந்தார்கள்.
இந்த நிலையில் திடீரென ஹர்திக் பாண்டியா மீண்டும் கேப்டனாக அனுப்பி உள்ளார். அவர் பொறுப்புக்கு வந்த உடனேயே மீண்டும் மும்பை பேட்ஸ்மேன்கள் படுமோசமாக விளையாடினார்கள். இதனால் 170 ரன் எடுக்க வேண்டிய ஆடுகளத்தில் 147 ரன் மட்டுமே எடுத்து சுருண்டார்கள்.
ஹர்திக் பாண்டியா வருத்தம்
இது குறித்து அவர் பேசும்போது “நாங்கள் இருபது ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் என்பது உண்மைதான். நானும் திலக் வர்மாவும் இன்னும் கொஞ்ச நேரம் ஆடி இருந்தால் அந்தக் கூடுதல் ஆன 20 ரன்கள் எங்களுக்கு கிடைத்திருக்கும். மேலும் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஆட எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பவுலர்களுக்கு சாதகம் இல்லாமல் இருந்து வரும் நிலையில் நான் இதை வரவேற்கிறேன்”
இதையும் படிங்க : வைபவ் சூரியவன்சி கிடைக்காத ஒரு தங்கம்.. அவன் டேலண்ட் யாருக்கும் வராது.. பிசிசிஐ இதை செய்ய வேண்டும் – கெய்ல் கோரிக்கை
“மேலும் இந்தத் தொடர் முழுக்க நாங்கள் பீல்டிங்கில் மிகவும் மோசமாக இருந்து வந்திருக்கிறோம். நாங்கள் நிறைய தருணங்களை அதன் காரணமாக இழந்திருக்கிறோம். அது இன்றைய போட்டியிலும் எங்களுக்கு தொடர்ந்து இருக்கிறது. தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






