தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் சுப்மன் கில்லுக்கு வேலை எளிதாக இருக்காது என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கையும் அறிவுரையும் செய்திருக்கிறார்.
இந்த எட்டு அணியின் கேப்டன் பொறுப்பில் மட்டும் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்று விட்ட காரணத்தினால் புதிய கேப்டனாகில் மற்றும் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இந்த மாதம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் விளையாட இருக்கிறது.
தற்போது இளம் வயதில் டெஸ்ட் கேப்டன் பதவியை கில் ஏற்று இருப்பதால் இது மட்டுமே அவருக்கு சவாலாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால் அவர் அணிக்கு ஒரு முக்கிய பேட்ஸ்மேன் ஆகவும் இருக்கிறார். எனவே அவர் ரன்கள் எடுக்க வேண்டியதும் முக்கியமான கடமையாக இருக்கிறது. ஒருவேளை அவர் பேட்ஸ்மேனாக ரன் எடுக்காவிட்டால் கேப்டன் பதவியும் எதிர்காலத்தில் பறிக்கப்படலாம்.
இது குறித்து பேசி உள்ள ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “என்னைப் பொறுத்தவரையில் நான் முன்பே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒரு போட்டிக்கு கில்லை கேப்டனாக கொண்டு வர வேண்டும் என்று சொன்னேன். அவரைப் பார்க்கும் பொழுது கூடுதல் பொறுப்புகள் அவரை சிரமப்படுத்துவது போல தெரியவில்லை. அவர் அழுத்தத்தை எடுத்துக்கொண்டு நல்ல முறையில் செயல்பட கூடியவராகவே தெரிகிறார்”
“அதே சமயத்தில் கில்லுக்கு வேலை சுலபமாக இருக்கப் போவது கிடையாது. அவர் பேட்டிங்கில் கொஞ்சம் நுட்பத்தை மாற்றி வேலை செய்ய வேண்டும். அவர் பந்துக்கும் மென்மையான விளையாடாமல் கடினமான கைகளால் விளையாடுகிறார். ஆனால் இந்த வகையில் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பாக சேவாக் இருந்திருக்கிறார். நீங்கள் இந்த நுட்பத்தில் எவ்வளவு வசதியாக விளையாடுகிறீர்கள் என்பதை பொறுத்தது. எனவே இது மனம் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கிறது”
இதையும் படிங்க : அடுத்த வருஷம் ஐபிஎல்க்கு இந்த மாதிரிதான் வருவேன்.. என்னோட லட்சியமே அதுதான் – வைபவ் சூரியவன்சி பேட்டி
“தற்போது ஜெய்ஸ்வாலுடன் சாய் சுதர்சன் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார் என்றால் மூன்றாவது இடத்தில் விளையாட அனுபவம் தேவை. எனவே இதற்காக கில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் விளையாடலாம். இல்லையென்றால் கருண் நாயர் மூன்றாவது இடத்திற்கு வந்தால், கில் கொஞ்சம் அனுபவத்தை பெற்றுக் கொள்ளும் வரை நான்காவது இடத்தில் விளையாடலாம்” என்று கூறியிருக்கிறார்.