இந்திய கிரிக்கெட்

சுப்மன் கில்லை டீமை விட்டு தூக்குனது ஆச்சரியமா இருக்கு.. அது இதைத்தான் காட்டுது – ரிக்கி பாண்டிங் பேச்சு

கடந்த வாரத்தில் டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் துணை கேப்டனாக இருந்து வந்த சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த விஷயம் தனக்கு மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய டி20 அணியில் தொடக்க இடத்திற்கு சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தியத் தேர்வுக் குழு சுப்மன் கில்லை எதிர்கால கேப்டனாக கொண்டு வருவதற்காக டி20 அணிக்குள் கொண்டு வந்தது. ஆனால் அவர் தனக்கு கிடைத்த 10 வாய்ப்புகளுக்கு மேல் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் அதிரடியாக நீக்கி இருக்கிறார்கள்.

என்னால் நம்ப முடியவில்லை

தற்போது மீண்டும் சஞ்சு சாம்சன் துவக்க வீரராக பார்க்கப்படுகிறார். மேலும் மாற்று விக்கெட் கீப்பராக இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் இசான் கிசான் கொண்டுவரப்பட்டிருக்கிறார். இதனால் கீழ் வரிசையில் ஃபினிஷர் ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் இந்திய அணி வலிமையானதாக மாறி இருக்கிறது.

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது ” சுப்மன் கில்லை இந்திய டி20 அணியில் இருந்து நீக்கியதை என்னால் நம்பவே முடியவில்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சமீபத்தில் அவருடைய பார்ம் சரியாக இல்லை என்பது எனக்கு தெரியும். கடைசியாக அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதை நான் பார்த்தேன். அதற்குப் பிறகு எங்கேயும் பார்க்கவில்லை. அவரை நீக்கி இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது இந்திய கிரிக்கெட்டின் ஆழத்தை காட்டுகிறது”

- Advertisement -

நிறைய வீரர்கள் இருக்கிறார்கள்

“கில் போன்ற ஒரு சிறந்த வீரர் ஒரு உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்பதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். இது அவர்களிடம் எவ்வளவு சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது”

இதையும் படிங்க : ருதுராஜ் இங்க இப்படித்தான் நடக்கும்.. மனச தளரவிடாம இதை செய்யுங்க – அஸ்வின் தந்த அறிவுரை

“எங்களுக்கு தெரிந்த வகையில் இந்தியா மிகச் சிறப்பாக கிரிக்கெட்டை அணுகிக் கொண்டிருக்கும் ஒரு நாடு. மேலும் ஒவ்வொரு ஐசிசி தொடர்களிலும் அவர்களை மேலே வைத்து பார்க்க வேண்டும். ஏனென்றால் தேர்வு செய்வதற்கு அவர்களிடம் பல வீரர்கள் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by