நாளைக்கு சிஎஸ்கேவ விடமாட்டோம்.. ஓபனா சொல்றேன் இதுதான் எங்க பிளான் – டெல்லி கோச் ரிக்கி பாண்டிங் பேச்சு

0
398
Ponting

ஐபிஎல் 17ஆவது சீசனில் இரண்டு போட்டிகளை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் விளையாடுகிறது. நாளை டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே ஆன போட்டி இந்த மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி கேப்பிடல் அணி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து இருக்கிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மிடில் வரிசையில் நல்ல பேட்ஸ்மேன் இல்லாதது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. மேலும் பந்துவீச்சிலும் பலவீனமாக இருப்பதால் அந்த அணி நடப்பு ஐபிஎல் தொடரில் பத்தாவது இடத்தை பிடிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் நாளை பலமான சிஎஸ்கே அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் அணி பெரிய போட்டியில் விளையாட இருக்கிறது. சிஎஸ்கே அணி ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக தொடர்ந்து இரண்டு வெற்றிகளை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

சிஎஸ்கே-வை ஜெயிக்க முடியும்

நாளைய போட்டி குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “எங்களுடைய கிரிக்கெட்டைப் பற்றி நாங்கள் இரண்டு முறை தற்பொழுது பேசியிருக்கிறோம். இதில் எங்களுடைய ஒருமித்த கருத்தாக இருந்தது என்னவென்றால் நாங்கள் நல்ல கிரிக்கெட்டும், மோசமான கிரிக்கெட்டும் கலந்து விளையாடியிருக்கிறோம் என்பதுதான். நாங்கள் 40 ஓவர்களுக்கும் தொடர்ந்து நல்ல கிரிக்கெட் விளையாடுவதற்கான வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இஷாந்த் சர்மா பாதியில் காயத்தால் வெளியேறியது தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் பந்துவீச்சில் கடைசி 10 ஓவர்களில் ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம்.

- Advertisement -

இருப்பினும் நாங்கள் நல்ல அணியான சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாகசெயல்பட முடியும் என்று நம்புகிறோம். ஆனால் இதற்கு நாங்கள் 40 ஓவர்களுக்கும் சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டியது அவசியம். அதே சமயத்தில் இது ஒரு குறுகிய தொடர் கிடையாது. இது நீண்ட தொடராகும். ஆனாலும் நீங்கள் எப்பொழுதும் நல்லவிதமாகவே தொடங்க விரும்புவீர்கள்.

இதையும் படிங்க :

நாங்கள் இன்னும் 12 ஆட்டங்கள் விளையாட வேண்டும். நாளை சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் மிகவும் பாசிட்டிவாக செல்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். முதல் இரண்டு ஆட்டங்களில் இருந்ததை விட நாளை ஆக்ரோஷமாக விளையாடுவோம். சிஎஸ்கேவுக்கு எதிராக நாங்கள் சரியான அணுகுமுறையை வெளிப்படுத்தினால் வெல்ல முடியும் என்பது உறுதி” என்று கூறியிருக்கிறார்.