நான் பார்த்ததிலேயே மோசமான டெஸ்ட் அணி இதுதான் – முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து

0
5825
Ricky Ponting

இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி ஏற்கனவே முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியுற்று தொடரை இழந்து விட்டது. ஏற்கனவே கலந்தாய் 2019ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த தொடரை கைப்பற்ற முடியாமல் சமன் மட்டுமே செய்ததால் ஆஸ்திரேலிய அணியினரிடமே ஆஷஸ் கோப்பை தங்கிவிட்டது. அதை மீட்க இங்கிலாந்து சார்பில் இந்த ஆண்டு எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்துள்ளன. மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று ரசிகர்களால் அறியப்பட்ட ஆஷஸ் தொடர், இந்த முறை இங்கிலாந்து அணியின் மோசமான பேட்டிங் காரணமாக ஒரு தலைப் பட்சமாகவே இதுவரை இருந்துள்ளது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக ஆடியோ போதும் அவரை தவிர மற்ற வீரர்கள் யாரும் நன்றாக விளையாடாததால் இங்கிலாந்து அணி இந்த தோல்வியை தழுவியுள்ளது. இந்த ஆண்டு முழுவதுமே ரூட் தவிர வேறு யாருமே அந்த அணியின் பேட்டிங்கில் பெரிதாக பங்களிக்கவில்லை. தனியாளாக ரூ 1700 க்கும் அதிகமான ரன்கள் எடுத்து ஆகும் மற்றவர்கள் யாரும் 600 ரன்களை கூட அடிக்கவில்லை. இங்கிலாந்து அணியின் மோசமான பேட்டிங்கை பார்த்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தற்போது கருத்து கூறியுள்ளார்.

- Advertisement -

உலக அளவில் சிறந்த கேப்டனாக வர்ணிக்கப்படும் ரிக்கி பாண்டிங் தற்போது நடந்து வரும் ஆஷஸ் தொடர் குறித்து பேசுகையில் நான் பார்த்ததிலேயே இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் இதைவிட மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கிடையாது என்று கூறியுள்ளார். அவர் கூறியது போலவே ஆஸ்திரேலிய நாட்டில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியை வென்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இங்கு வந்து கடைசியாக ஆடிய கடந்த 2017ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரிலும் 4-1 என்று தோல்வியை பெற்றுச் சென்றது இங்கிலாந்து அணி.

இந்த தோல்விகளில் இருந்து மீண்டு இங்கிலாந்து அணி மீண்டும் பழைய படியாக டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துவதை காண இங்கிலாந்து அணியின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.