கடந்த தசாப்தத்தில் லெஜெண்ட் வீரர்களாக இருந்தவர்களில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் பயிற்சியாளராகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக இருந்த அவர் தற்பொழுது அமெரிக்கா எம்எல்சி தொடரில் பயிற்சியாளராக இருக்கிறார். இந்த நிலையில் பயிற்சி அளிப்பது குறித்து சில முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ரிக்கி பாண்டிங் இந்த வருடத்துடன் பொறுப்பில் இருந்து விலகுகிறார். அதே நேரத்தில் அவர் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு அமெரிக்கா எம்எல்சி தொடருக்கு தலைமை பயிற்சியாளராக சென்று இருக்கிறார்.
இந்த நிலையில் 360 டிகிரியில் விளையாடக்கூடிய எக்ஸ் ஃபேக்டர் வீரர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்க வேண்டும்? என்பது குறித்து பேசிய அவர் இப்படியான வீரர்களிடம் அதிகமாக எதையும் திணித்து அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது “எக்ஸ் ஃபேக்டராக இருக்கும் வீரர்களிடம் அவர்கள் கிரிக்கெட் குறித்து நான் அதிகம் பேச விரும்புவதில்லை. நீங்கள் ஒரு பயிற்சியாளராக அவர்களின் கிரிக்கெட் பற்றி பேசும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். அப்படியான திறமை இருக்கக் கூடிய வீரர்களுக்கு நாம் சொல்லும் விஷயங்கள் தவறாக முடிந்து விடக்கூடாது.
அவர்களுடைய எக்ஸ் ஃபேக்டர் திறமை வெளியில் வராதபடி நம்முடைய யோசனைகள் தடுத்து விடக்கூடாது. அதனால் திறமை குறைவாக இருப்பவர்களுக்கு எனக்கு பயிற்சி அளிப்பது மிகவும் சுலபமான விஷயம். ஏனென்றால் அவர்களுக்கு தேவையான விஷயங்களை என்னால் கொடுக்க முடியும் அவர்களை என்னால் மாற்ற முடியும்.
இதையும் படிங்க : கில் ஜெய்ஸ்வால் கிடையாது.. இந்திய டி20 அணியில் இவர்தான் எக்ஸ் ஃபேக்டராக இருப்பார் – கேப்டன் சூரியகுமார் கணிப்பு
சிறந்த 360 டிகிரி வீரர் யார்? என்று பிரிப்பது கடினமானது. இப்போது ஏபி டிவில்லியர்ஸ் இல்லாத காரணத்தினால் இந்தியாவின் சூரியகுமார் யாதவ் மற்றும் ஆஸ்திரேலியாவின் கிளன் மேக்ஸ்வெல் இருவரும் 360 டிகிரியில் விளையாடக்கூடிய சிறந்த பேட்ஸ்மேன்களாக இருக்கிறார்கள். அதே சமயத்தில் தன்னுடைய பீல்டிங் மற்றும் பந்துவீச்சு பங்களிப்பின் காரணமாக மேக்ஸ்வெல் அதிக முக்கியத்துவம் கொண்ட வீரராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.