கில் ஜெய்ஸ்வால் கிடையாது.. இந்திய டி20 அணியில் இவர்தான் எக்ஸ் ஃபேக்டராக இருப்பார் – கேப்டன் சூரியகுமார் கணிப்பு

0
7357

இந்திய கிரிக்கெட் அணி
நாளை இலங்கை அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் சூரியகுமார் யாதவ் இந்திய அணி குறித்தும் வீரர்கள் குறித்தும் சில முக்கியக் கருத்துகளை கூறியிருக்கிறார்.

டி20 உலக கோப்பைக்கு பிறகு சீனியர் வீரர்கள் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு திரும்பி இருக்கின்றனர். புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் ஆன கௌதம் கம்பீர் தலைமையில் நாளை முதல் போட்டி இந்திய அணி விளையாட உள்ளதால் அதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் டி20 ஃபார்மெட்டில் இருந்து மூன்று சிறந்த வீரர்கள் ஓய்வு பெற்றிருக்கும் நிலையில் அவர்களது இடங்களை நிரப்ப இந்த தொடர் மிக முக்கியமானதாக அமையும். அதுமட்டுமல்லாமல் இளம் வீரர்களும் இந்த தொடரில் இடம் பெற்று இருப்பதால், அடுத்த உலகக் கோப்பைக்காண இந்திய அணியை சரியாக கட்டமைக்க வேண்டிய பொறுப்பு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இடையே இருக்கிறது.

சமீபத்திய ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர் ரியான் பராக் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்திருந்தார். ஆனால் அந்த தொடரில் ஓரளவு பங்களிப்பை மட்டுமே வெளிப்படுத்திய நிலையில், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து சூரியகுமார் யாதவ் கூறும் பொழுது “நான் ரியான் பராகை மிகவும் உயர்வாக மதிப்பிடுகிறேன். ஐபிஎல் தொடருக்கு முன்பாக காயத்திலிருந்து எங்களை சரி செய்து கொண்டிருந்த போது என்சிஏவில் ரியான் பராகை சந்தித்தேன். அவர் எக்ஸ் பேக்டர் ஆக மாறுவதற்கான அனைத்து திறமையும் அவரிடம் உள்ளது. எனவே மற்றவைகளை ஒதுக்கி வைத்து விட்டு அவர் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதை அவரும் உணர்ந்திருக்கிறார். முந்தைய நான்கு சீசனில் இருந்து தற்போது அவர் வித்தியாசமான வீரராக இருக்கிறார்.

இதையும் படிங்க:சிஎஸ்கேல நான் இருப்பனான்னு தெரியல.. ஆனா ஐபிஎல் 2025-ல் இது கண்டிப்பா நடக்கும் – பதிரானா உறுதி

கடந்த இரண்டு வருடங்களாக அவர் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு இது ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. அவர் தற்போது இந்திய அணியில் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று சூரியகுமார் கூறியிருக்கிறார். தற்போது சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றிருக்கும் நிலையில் கில், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு அவர்களது இடங்களை பூர்த்தி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -