தற்போது இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். இப்போது அவர் ரன்கள் எடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?என்பது குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அறிவுரை கூறியிருக்கிறார்.
இந்திய டி20 அணியின் துணை கேப்டன் கில் சரியாக விளையாடாத காரணத்தினால் அதிரடியாக டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதே சமயத்தில் கேப்டன் சூரியகுமார் யாதவும் பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் இருந்து வருகிறார். அவர் கேப்டனாக இருப்பதால் அணியை விட்டு நீக்காமல் இருக்கிறார்கள்.
டி20 சிறப்பு பேட்ஸ்மேன்
உலக கிரிக்கெட்டில் 360 டிகிரியிலும் விளையாடக்கூடிய சிறந்த பேட்ஸ்மேனாக ஏபி டிவில்லியர்ஸ் இருந்தா. அவரது ஓய்வுக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்பக்கூடியவராக இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் உருவெடுத்தார். சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து என வெளிநாடுகளிலும் சதம் அடித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 600 ரன்கள் தாண்டி எடுத்த முதல் தொடக்க வீரர் அல்லாத பேட்ஸ்மேன் என்ற சாதனையை சூரியகுமார் யாதவ் படைத்திருந்தார். அதற்குப் பிறகு ஆசியக் கோப்பைக்கு திரும்பிய அவர் தொடர்ந்து மோசமான முறையில் பேட்டிங் செய்து வருகிறார். இந்த டி20 உலகக் கோப்பைக்கு பிறகு தொடர்ந்து அவர் சரியாக விளையாடாவிட்டால் அணியை விட்டும் நீக்கப்படலாம்.
சூரியகுமார் யாதவ்தான் பெஸ்ட்
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது ” தற்போது சூரியகுமார் யாதவ் இருக்கும் நிலையை பார்த்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை கொடுத்து வந்திருக்கிறார். தற்பொழுது ரன் எடுக்க முடியாமல் சிரமப்படுகிறார்”
“அவர் ஒரு சுவாரசியமான வீரர். அவர் ரன்கள் எடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். அவர் மிகச் சிறப்பாக விளையாடிய காலங்களிலும் பார்த்திருக்கிறேன். மேலும் அவர் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள 6 முதல் 10 பந்துகள் எடுப்பார். பிறகு அவர் வித்தியாசமாக விளையாட ஆரம்பித்து விடுவார்”
இதையும் படிங்க : வெறும் 15 பந்து.. ரிஷப் பண்டின் சாதனையை தூள் தூளாக்கிய வைபவ் சூரியவன்சி.. புது ரெக்கார்டு
“சூரியகுமார் யாதவ் இப்பொழுது அவரை அவர் மிகவும் நம்ப வேண்டும். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் மிகச்சிறந்தவர் என்பதை நிரூபித்திருக்கிறார். இந்த வடிவத்தில் உள்ள மற்ற எவரையும் விட சிறந்தவர் என்றும் நிரூபித்து இருக்கிறார். எனவே மீண்டும் அப்படி செய்ய முடியும்” என அவர் நம்ப வேண்டும் என்று கூறி இருக்கிறார்.






