நேற்று தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வைபவ் சூரியவன்சி ரிஷப் பண்டின் மெகா சாதனை ஒன்றை உடைத்திருக்கிறார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு முழுவதுமாக ஏதாவது ஒரு சாதனைகளை இளையோர் கிரிக்கெட்டில் வைபவ் சூரியவன்சி புதிதாக படைத்துக் கொண்டே வந்தார். தற்போது 2026 ஆம் ஆண்டு தொடக்கத்திலும் இளையோர் கிரிக்கெட்டில் ஒரு முக்கிய சாதனையை படைத்திருக்கிறார்.
இந்திய அணி வெற்றி
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய வந்தது. அந்த அணிக்கு ஜேசன் ரோவல்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 113 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணி 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் கிஷன் குமார் சிங் 4 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து இந்திய அணி விளையாடிய பொழுது மின்னல் பிரச்சனையின் காரணமாக போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்திய அணி 23 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் மொத்தமாக நிறுத்தப்பட்டது. மேலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வைபவ் சூரியவன்சி சாதனை
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் தொடக்க ஆட்டக்காரருமான வைபவ் சூர்யவம்சி 24 பந்தில் 68 ரன்கள் குவித்தார். இதில் மொத்தம் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து 10 சிக்ஸர்களை நொறுக்கி தள்ளினார். இதன் மூலம் அவர் ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறார்.
இதையும் படிங்க : அகர்கருக்கு 10/10 முழு மதிப்பெண் தருவேன்.. இப்படி ஒரு வேலையை செய்வார்னு நான் நினைச்சு கூட பார்க்கல – ஹர்பஜன்சிங் பெருமிதம்
இந்த போட்டியில் வைபவ் சூரியவன்சி வெறும் 15 பந்தில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் இளையோர் கிரிக்கெட்டில் அதிவேக அரை சதம் அடித்த இடது கை பேட்ஸ்மேனாக சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக இந்திய வீரர் ரிஷப் பண்ட் 2016 ஆம் ஆண்டு இளையோர் கிரிக்கெட்டில் 18 பந்தில் அரை சதம் அடித்து இருந்ததே சாதனையாக இருந்தது. அதை தற்பொழுது வைபவ் சூரியவன்சி முறியடித்திருக்கிறார்.






