இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் குவித்து, ஒரே ஒரு முறை மட்டுமே பேட்டிங் செய்யும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். மான்செஸ்டர் டெஸ்டில் இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 46 ஓவர்களில் 225/2 என்று இருந்தது.
எனினும் 3வது நாளில் இங்கிலாந்து வழக்கம் போல் ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிக்கி பாண்டிங்,”இன்று விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால், இந்த போட்டி இந்தியாவின் கைகளில் இருந்து வேகமாக நழுவிப் போகும். இந்த வெயிலில், ஆடுகளம் இப்படியே இருக்கிறது.”
ரிக்கி பாண்டிங் கணிப்பு:
“நேற்று மாலை ஜடேஜா சில பந்துகளை வீசிய போது பந்து, தாமதமாக திருப்பியதைப் பார்த்தோம். இந்தப் போட்டியில் பின்னர் பேட்டிங் செய்வது எளிதாக இருக்காது. எனவே, இங்கிலாந்து நேற்று இரவு ஒரு முறை மட்டுமே பேட்டிங் செய்யும் வாய்ப்பைப் பற்றி யோசித்திருக்கும்.
அவர்கள் இன்று நீண்ட நேரம் பேட்டிங் செய்ய விரும்புவார்கள்.”
“முழு நாளையும் கடந்து, முதல் இன்னிங்ஸில் பெரிய ரன்களை எடுக்க விரும்புவார்கள். இன்றைய பேட்டிங் நிலைமைகளைப் பற்றி யோசிக்கும்போது, இங்கிலாந்து நேற்று சிறந்த நிலையைப் பெற்றது. காலை அமர்விலிருந்து பிற்பகல் வரை ஆடுகளமும் நிலைமைகளும் எவ்வளவு மாறியிருக்கின்றன என்பதைப் பார்க்க முடிந்தது.”
பாண்டிங்கை முந்திய ஜோ ரூட்:
“இப்போது இருக்கும் நிலைமைகளை விட பேட்டிங் நிலைமைகள் இனி சிறப்பாக இருக்காது. களத்தில் இரண்டு சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். இந்தியா வழியைக் கண்டறிந்து இந்தப் போட்டியில் மீண்டு வர வேண்டும்,” என்று பாண்டிங் கூறினார். 4வது டெஸ்ட்டில் மூன்றாம் நாளில் தேநீர் இடைவேளையின் போது, இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 433 ரன்கள் எடுத்துள்ளது.
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் மிரட்டலான சாதனை படைத்த ஜோ ரூட்.. உலகின் நம்பர் 3வது வீரராக உயர்ந்தார்.. விவரம்
சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 38வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதில் இந்தியாவுக்கு எதிராக மட்டும் ஜோ ரூட் 12 சதம் அடித்து, இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் எடுத்த வீரர் என்ற பெயரை பெற்றார். அதுமட்டும் இல்லாமல், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜோ ரூட் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளார்.






