“திரும்பவும் எல்லாம் மாறனும்.. இப்படி நடக்க கூடாது!” – கங்குலி ரோகித்துக்கு அழைப்பு!

0
4869
Ganguly

தற்பொழுது இந்திய ஆண்களுக்கு கிரிக்கெட் அணி மூன்று கிரிக்கெட் தொடர்களில் விளையாட தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்கிறது.

இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டி டிசம்பர் 10ஆம் தேதி துவங்குகிறது. ஒட்டுமொத்தமாக தொடர் ஜனவரி 7ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

- Advertisement -

இதுமட்டும் இல்லாமல் இந்தியாவின் முக்கிய அணி செல்வதற்கு முன்னால் இந்திய ஏ அணி மூன்று ஆட்டங்களில் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்கா செல்கிறது. இதற்கும் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அறிவிக்கப்பட்ட மூன்று வடிவ தொடர்களுக்கும் இந்திய தரப்பில் மூன்று கேப்டன்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். டி20க்கு சூரியகுமார் யாதவ், ஒருநாள் தொடருக்கு கே.எல்.ராகுல், டெஸ்ட் தொடருக்கு ரோகித் சர்மா ஆகியோர் கேப்டன்களாக இருக்கிறார்கள்.

மேலும் இந்திய டி20 அணியை எடுத்துக் கொண்டால் மூத்த வீரர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சூரியகுமார் யாதவ்தான் இருக்கிறார்கள். பும்ரா வரை ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. எனவே இதற்கான இந்திய அணி உருவாக்கத்தை இப்பொழுது இருந்தே ஆரம்பித்தாக வேண்டும். ஆனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் நிலை என்னவென்று தெரியவில்லை.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறும் பொழுது “தற்போதைய பிரச்சனை என்னவென்றால் இந்திய அணியின் பலமுன்னணி வீரர்கள் கிடைக்கவில்லை. சூரிய குமார் டி20 கேப்டன். அவர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் சேர்க்கப்படவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டுக்கு கேஎல்.ராகுல் கேப்டனாக இருக்கிறார். டெஸ்ட்டுக்கு ரோகித் சர்மா வருகிறார்.

நான் முன்பே சொன்னது போல் ரோகித் சர்மா மூன்று வடிவங்களிலும் விளையாட வேண்டும். மேலும் அவரே மூன்று வடிவங்களுக்கும் கேப்டனாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர் உலகக் கோப்பையில் நன்றாக செயல்பட்டார். மேலும் அவர்தான் கேப்டன். டி20 உலகக் கோப்பையில் அவர் கேப்டனாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!