பிட்ச் மாத்தனும்னு கேட்டு அடம்பிடிக்காமல், இந்தியாவுக்கு போய் நம்ம யாருன்னு கெத்து காட்டீட்டு வாங்கடா! – முன்னாள் பாகிஸ்தான் வீரர்!

0
511

உலகக்கோப்பை தொடரில் பிட்ச் மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்த பாகிஸ்தான் அணியை அதன் சொந்த நாட்டு வீரர் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் அணி வந்து பங்கேற்பதற்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்திருக்கிறது. மேலும் ஐசிசி இதற்கு பக்கபலமாகவும் இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் 5 மைதானங்களில் நடைபெறுகின்றன. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத் ஆகியவையாகும்.

இதில் சென்னை மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியையும், பெங்களூரு மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியையும், அகமதாபாத் மைதானத்தில் இந்திய அணியையும் எதிர்கொள்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.

இந்நிலையில் சென்னையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை பெங்களூருவுக்கும், பெங்களூருவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியை சென்னைக்கும் மாற்றி கொடுக்கும்படி ஐசிசி இடம் கோரிக்கை வைத்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

- Advertisement -

இந்த விவகாரத்தை பரிசீலனை செய்த ஐசிசி கிரிக்கெட் வாரியம், இதற்கு முறையான காரணங்கள் இல்லை. ஆகையால் இதில் மாற்றங்கள் செய்ய முடியாது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கொடுக்கப்பட்ட மைதானங்களில் தான் விளையாட வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது.

அதன்பிறகு பாகிஸ்தான் அணி அமைதியாக இருந்தாலும், அதன் முன்னாள் வீரர்கள் சாயித் அப்ரிடி, சோயிப் அக்தர் மற்றும் பல வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது முறையற்றது. பாகிஸ்தான் அணி தங்களது சிறந்த கிரிக்கெட் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தனது கருத்தை கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் என்று வந்து விட்டாலே மைதானத்தின் கண்டிஷனுக்காக மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கக்கூடாது. அந்த கண்டிஷனை உணர்ந்து எப்படி செயல்படலாம் என்று உங்களது கிரிக்கெட்டின் மீது கவனம் செலுத்த வேண்டும்.. இப்படி தரக்குறைவான கோரிக்கைகளை முன்வைத்து, மைதானத்தை மாற்றி கொடுக்க வேண்டும் என்று பேசுவது பாகிஸ்தான் போன்ற சிறந்த அணிக்கு அழகல்ல.

நம்மிடமும் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிகாட்டி போட்டிகளை வெற்றி பெறுவதற்கு பார்க்க வேண்டும். இந்திய அணி தங்களது சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளை அவர்களது சொந்த மைதானங்களில் வீழ்த்தியிருக்கிறது. இது போன்ற போட்டிகளை எடுத்துக்காட்டாக வைத்துக் கொண்டு சிறப்பாக செயல்படுவதற்கு பார்க்க வேண்டும்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் நான் வைக்கும் ஒரு கோரிக்கையை என்னவென்றால், எந்த வகையிலும் உங்களது தரத்தை குறைத்துக் கொள்ளாதீர்கள். உலகக்கோப்பையை வென்ற அணிக்கு இது எந்த வகையிலும் அழகல்ல.” என்றார்