அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மெகா ஏலத்துடன் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே மெகா ஏலத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படலாம் என்பது குறித்து அணிய உரிமையாளர்களின் கருத்தைக் கேட்கும் கூட்டம் இன்று நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அணி உரிமையாளர்கள் வெளிநாட்டு வீரர்கள் விஷயத்தில் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்திருப்பதாக தெரிகிறது.
அடுத்த வருட ஐபிஎல் மெகா ஏலத்தில் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்? என்பது இந்த அணிக் கூட்டத்தில் பிரதான விஷயமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சில பெரிய அணிகள் ஏழு முதல் எட்டு வீரர்களை தக்க வைக்க கேட்பதாகவும், சிறிய அணிகள் பழைய முறையில் நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள் என்று தெரிகிறது.
இந்த விஷயத்தைச் சுற்றிதான் அணிக்கூட்டத்தில் பெரிதாக விவாதிக்கப்படும். மேலும் ஏலத்தில் ஒரு அணிக்கு அனுமதிக்கப்படும் அதிகபட்ச தொகையும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கு அடுத்து இம்பேக்ட் பிளேயர் விதியும் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்.
மேலும் ஐபிஎல் தொடரில் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின்னால் கடைசி நேரத்தில் எந்தவித சரியான காரணங்களும் இல்லாமல் விலகும் வெளிநாட்டு வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணி உரிமையாளர்கள் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாக தெரிகிறது. இங்கிலாந்தின் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேலஸ் மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகியோர் இதில் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.
இதுகுறித்து ஐபிஎல் அணியின் அதிகாரி ஒருவர் கூறும் பொழுது “ஒரு அணி ஐம்பது ரன்களுக்கு நான்கு விக்கெட்டை இழந்த பொழுதும், அல்லது மூன்று விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்த பொழுதும் இம்பேக்ட் பிளேயர் விதியால் போட்டி முடிவடையாமல் தொடர்ந்து போராட வசதியாக இருந்தது. இதில் சில ஆல் ரவுண்டர்கள் பாதிக்கப்பட்டாலும் கூட, பயிற்சியாளர்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட நிறைய ஆப்ஷன்கள் இருந்தன. இது குறித்து அணி உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடத்தில் இருந்து எந்த புகார்களும் வரவில்லை. எனவே இம்பேக்ட் பிளேயர் விதி தொடர் அதிக வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : கம்பீர் சூர்யாகிட்ட என் கேள்வி இதுதான்.. இந்தியா இனி டி20 இப்படித்தான் விளையாடுமா.? – முன்னாள் செலக்டர் சேத்தன் சர்மா
அதே சமயத்தில் கடைசி நேரத்தில் நியாயமான காரணங்கள் இன்றி குறைந்த தொகைக்கு ஏலம் போனதால் விலகும் வெளிநாட்டு வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய கிரிக்கெட் வாரியமும் யோசித்து வருவதாக தெரிகிறது. இது ஐபிஎல் தொடருக்கு ஆரோக்கியமான ஒன்றாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது!






