கம்பீர் சூர்யாகிட்ட என் கேள்வி இதுதான்.. இந்தியா இனி டி20 இப்படித்தான் விளையாடுமா.? – முன்னாள் செலக்டர் சேத்தன் சர்மா

0
1774

இலங்கையில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்றிய நிலையில், பலராலும் இந்த நிகழ்வு பாராட்டப்பட்டது.

இந்த சூழ்நிலையில் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் தலைமை பயிற்ச் mசியாளர் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு இலங்கை டி20 தொடர் மூலம் தனது கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி குறிப்பாக பேட்டிங் ஆர்டரை அதிகப்படுத்த விரும்பியது. அதில் முக்கியமாக சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தவிர்த்து மற்றொரு சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக அக்ஷார் பட்டேல் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். கொண்டுவரப்பட்டது மட்டுமல்லாமல் அவர் அனைத்து போட்டிகளிலும் ஜடேஜாவை விட சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி உலக கோப்பையை வெல்லவும் முக்கிய பங்காற்றினார்.

இந்த சூழ்நிலையில் தற்போது இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் சூரியகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் இதே டெம்ப்ளேட்டை விரும்புவதாக தெரிகிறது. ஏனென்றால் நான்கு பந்துவீச்சாளர்களை தவிர்த்து ஹர்திக் பாண்டியா மற்றொரு பந்துவீச்சாளராக இருக்க, மற்றும் ஒரு வீரராக ரியான் பராக்கை தயார் படுத்திக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இதன் மூலம் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே இந்திய அணிக்கு அதன் ஆழத்தை அதிகரிக்க கூடிய விஷயமாக தெரிகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் செயல்பட்ட ரியான் பராக்கை உடனடியாக இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சேத்தன் சர்மா இந்திய அணி இதே டெம்ப்ளேட்டை வரும் காலங்களில் பின்பற்றப்படுமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து பார்க்கும்போது இந்தியாவின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் ஆல் ரவுண்டர்களை விரும்புவது போல தெரிகிறது. ஹர்திக் பாண்டியா மற்றும் ரியான் பராக் ஆகியோர் ஐந்தாவது பந்து வீச்சாளராக அடிக்கடி அடி எடுத்து வைக்கிறார்கள். எனவே இதுதான் இந்திய அணியின் இப்போதைய டெம்ப்ளேட். இனி வரும் காலங்களிலும் பிசிசிஐ இதே போன்ற நடைமுறையை தான் பின்பற்றப்படுமா?என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதையும் படிங்க:ஐசிசி ரேங்கிங்.. டெஸ்டில் ஜோ ரூட் நம்பர் 1.. டி20ல் வாஷிங்டன் சுந்தர் 6 இடம் உயர்வு.. பல இந்திய வீரர்கள் முன்னேற்றம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக செயல்பட்ட கௌதம் கம்பீர், அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றி சாதனை படைத்தார். அதேபோல தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக விளங்கி வரும் நிலையில், அவர் இதுபோல என்ன மாற்றங்கள் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -