ரோகித் கோலி கோரிக்கையை புறக்கணிக்கும் பிசிசிஐ?.. ஆல் ரவுண்டர்களுக்கு மீண்டும் பிரச்சனை.. புதிய தகவல்கள்

0
1200
Jay

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மெகா ஏலத்துடன் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மெகா ஏலம் தொடர்பாகவும் அதில் பின்பற்றப்படும் விதிமுறைகள் தொடர்பாகவும் சில முக்கியமான செய்திகள் வெளி வந்திருக்கின்றன. குறிப்பாக ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் வைத்த ஒரு கோரிக்கை புறக்கணிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் மூன்று வீரர்களை நேரடியாக தக்க வைக்கலாம் மேலும் இரண்டு வீரர்களை ஆர்டிஎம் மூலம் தேவைப்பட்டால் ஏலத்தில் விட்டு மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் என்கின்ற விதி இருந்தது. இது அணிகளுக்கு ஏலத்தில் சில வசதிகளை உருவாக்கியது. தாங்கள் விடுகின்ற வீரர்களை முடிந்தால் குறைந்த விலைக்கு வாங்க முடிந்தது. மேலும் தாங்கள் திட்டமிட்ட வீரர் கிடைக்காத பொழுது பழைய வீரருக்கே திரும்ப முடிந்தது.

- Advertisement -

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு மெகா ஏளத்தில் கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் இரண்டு அணிகள் வந்ததால், நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்கலாம் என்கின்ற விதி கொண்டுவரப்பட்டது. ஆர்டிஎம் முறை நீக்கப்பட்டது. இதன் காரணமாக புதிய அணிகளுக்கும் சிறப்பான வீரர்கள் கிடைத்தார்கள்.

தற்போது அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலத்தை நடத்துவது தொடர்பாகவும், வீரர்களை தக்க வைக்கும் எண்ணிக்கை தொடர்பாகவும், இம்பேக்ட் பிளேயர் விதி தொடர்பாகவும் ஆலோசனை செய்வதற்காக பத்து அணிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தக் கூட்டம் இந்த மாதம் 31ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஆனால் எந்த இடத்தில் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடரில் இந்திய மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இம்பாக்ட் பிளேயர் விதிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். 11 வீரர்களைக் கொண்டு விளையாடும் போது மட்டும் தான் கிரிக்கெட் சவால்கள் பெரிதாக இருக்கும், மேலும் கூடுதல் வீரர் இருப்பதால் ஆல் ரவுண்டர்களின் தேவையில்லாமல் போய்விடுகிறது. எனவே இந்த விதியை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். தற்பொழுது பிசிசிஐ இவர்களது கோரிக்கையை புறக்கணிக்கும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : அக்சர் படேலுக்காக அவருக்கு அநியாயம் பண்றிங்க.. பழசை கொஞ்சம் திரும்பி பாருங்க – பிரக்யான் ஓஜா வருத்தம்

இது குறித்து வெளியான ஒரு செய்தியில் அணி உரிமையாளர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் உட்பட ஐபிஎல் தொடரில் பல பங்குதாரர்கள் இம்பேக்ட் பிளேயர் விதியின் மீதான எந்த புகாரையும் சொல்லவில்லை. மேலும் அவர்கள் இம்பேக்ட் பிளேயர் விதியை விரும்புவதாக தெரிகிறது. இந்த விதியின் காரணமாக போட்டித் தன்மையை அதிகரித்துள்ளதாக இவர்கள் நம்புகிறார்கள். எனவே இம்பேக்ட் பிளேயர் விதி அடுத்த வருடமும் தொடரவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது!

- Advertisement -