துபாய்க்கு ஜெய்ஸ்வால் பிரசித் யாரும் வர வேண்டாம்.. 17 க்கு 15 பேர் போதும்.. கில்லை காப்பாற்ற ஸ்பெஷல் நடவடிக்கையா?

0
178
Gill

அடுத்த மாதம் தொடங்க இருக்கும் ஆசியக் கோப்பை தொடருக்கு துபாய்க்கு இந்திய ரிசர்வ் வீரர்கள் யாரும் வர வேண்டாம் என முடிவு பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

இந்திய அணி நடக்க இருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி யுஏஇ, 14ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் 19ஆம் தேதி ஓமன் ஆகிய நாடுகளுக்கு எதிராக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரிசர்வ் வீரர்கள் வேண்டாம்

தற்போது ஆசியக் கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் 15 பேர் கொண்ட அணிக்கு ஜெய்ஸ்வால், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரல் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்திய அணி செப்டம்பர் நான்காம் தேதி துபாய்க்கு பயணப்பட இருக்கிறது. இந்த நிலையில் ரிசர்வ் வீரர்கள் 5 பேருமே ஆசியக் கோப்பை தொடருக்கு இந்திய அணியுடன் பயணிக்க மாட்டார்கள் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து செய்திகள் வந்திருக்கிறது.

- Advertisement -

கில்லை காப்பாற்ற நடவடிக்கையா?

மேலும் ஆசியக் கோப்பை தொடருக்கு ஒரு அணி நிர்வாகம் 17 வீரர்கள் வரையில் தேர்வு செய்யலாம். ஆனால் இந்திய தேர்வுக்குழு 15 வீரர்களை மட்டுமே தேர்வு செய்தது. இந்த நிலையில் தற்போது ரிசர்வ் வீரர்கள் யாரையும் வரவேண்டாம் என்றும் கூறியிருப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க : வெறும் 3 மாசம்.. நான் தோனி கிட்ட ஆச்சரியப்படுறது இதுக்குதான்.. எப்பா சாமி பெரிய ஆளு – அஸ்வின் பேச்சு

ஒருவேளை இந்தியா அணி 17 பேரை தேர்ந்தெடுத்து அதில் ஜெய்ஸ்வால் இடம்பெற்று இருந்தால், கில் சரியாக விளையாடாத பொழுது உடனடியாக ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்திருக்கும். இதனை தவிர்க்கவே 15 பேர் கொண்ட அணியை தேர்ந்தெடுத்ததோடு, தற்போது ரிசர்வ் வீரர்களையும் துபாய்க்கு வர வேண்டாம் என்று தடுத்து இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -