இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரையும் இழந்து தற்போது மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தீபாவளி நாளிலும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு செக் வைத்துள்ளது ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்து டெஸ்ட் தொடரையும் இழந்திருப்பது இந்திய முன்னாள் வீரர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் வருகிற 1ம் தேதி நடைபெற உள்ள கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் இருக்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் என மொத்தமாக ஆறு டெஸ்ட் போட்டிகளில் ஐந்தில் கட்டாயம் வெற்றி பெற்றதாக வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இந்த சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு இந்திய நிர்வாகம் வருகிற 30 மற்றும் 31ம் தேதிகளில் இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சி பெற வேண்டும் என்று பிசிசிஐ கட்டாயப்படுத்தி உள்ளது.
ஒரு ஆங்கில பத்திரிக்கையில் வெளி வந்திருக்கும் தகவலின் படி இரண்டாவது டெஸ்ட் போட்டி தோல்வி பெற்ற சில மணி நேரங்களிலேயே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வீரர்கள் அனைவரும் அந்த இரண்டு தினங்களில் கட்டாயம் பயிற்சி பெற வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் இந்திய அணியின் தோல்வி வீரர்களுக்கு சற்று சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.பண்டிகை நாட்களில் கூட குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியாத சூழ்நிலைக்கு வீரர்கள் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க:ஒரே நைட்ல மோசமான டீம் ஆகாது.. நடந்த கதையே வேறு.. அடுத்த டெஸ்ட்ல இந்திய அணி இதை செய்யும் – நியூசி கேப்டன் பேட்டி
முன்னணி வீரர்கள் ஆன விராட் கோலி, கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் போட்டி முடிந்து இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்து இருக்கும் நிலையில் அவர்களும் 30 மற்றும் 31ம் தினங்களில் பயிற்சி பெறுவார்கள் என்று தெரிகிறது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள கடைசி போட்டி மும்பையில் வருகிற நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே இதில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமையில் இருக்கிறது.