ஒரே நைட்ல மோசமான டீம் ஆகாது.. நடந்த கதையே வேறு.. அடுத்த டெஸ்ட்ல இந்திய அணி இதை செய்யும் – நியூசி கேப்டன் பேட்டி

0
2524

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து தற்போது மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற சற்று சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் இந்திய அணி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நியூசிலாந்து அணி வெற்றி

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றி பெற்று அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணிக்கு முதல் அடியே சரியாக அமையவில்லை. பெங்களூரில் நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் புனேவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற இது சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இந்திய அணி மற்றும் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் தற்போது மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தால் மோசமான அணியாக மாறிவிடாது எனவும் அவர்கள் அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புவதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

மோசமான அணியாக மாறிவிடாது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இரண்டாவது போட்டியில் ஜெய்ஸ்வால் ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோர் வெளியேறி விளையாடிய விதம் எங்களை நிச்சயமாக அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. மேலும் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்துவது கடினமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். தற்போது வெற்றி பெற்றது மகிழ்ச்சியான உணர்வாக இருக்கிறது. ஆனால் இந்திய அணி மிகவும் தரமான அணி. ஆனால் ஒரே இரவில் மோசமான அணியாகவோ அல்லது இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்த பிறகு மோசமான அணியாகவோ மாறிவிட மாட்டார்கள்.

இதையும் படிங்க:கம்பீர் மேல தப்பில்ல.. ரோஹித் சுந்தர வச்சு பண்ண அந்த ஒரு விஷயம்தான் பிரச்சனை ஆயிருக்கு – சஞ்சய் மஞ்சுரேக்கர் விமர்சனம்

இந்திய அணியில் 1 முதல் 15 வரை விளையாடும் அனைவருமே மேட்ச் வின்னர்கள்தான். சில சமயங்களில் நீங்கள் நன்றாக விளையாடினாலும் விளைவு தவறாக மாறலாம். எனவே மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் அவர்கள் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பலாம். அந்த சூழலை எதிர்கொள்ள எங்கள் அணி வீரர்களும் தயாராக இருக்கிறார்கள். இரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது சிறப்பாக உள்ளது. கடந்த 69 ஆண்டுகளில் நிறைய நியூசிலாந்து அணிகள் வந்துள்ளன. 13 தொடர்களில் முதல் தொடரை வென்ற நமது அணி குறித்து பெருமை கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -