தேடி வந்த கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்த ஸ்ரேயாஸ்.. குழப்பி கெடுத்த கம்பீர் அகர்கர் – வெளியான தகவல்கள்

0
187
Shreyas

இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தேடி வந்த கேப்டன் பொறுப்பை அவர் நிராகரித்ததாகவும், தற்போது அவர் இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்படாமல் போய்விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.

இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடர் துலிப் டிராபி இந்த மாதம் இறுதியில் தொடங்கி நடைபெற இருக்கிறது. இதில் இந்திய முக்கிய வீரர்கள் மிகச் சிலரே விளையாட மாட்டார்கள். மற்றபடி அனைத்து இந்திய நட்சத்திர வீரர்களும் பங்கு பெற இருக்கிறார்கள்.

- Advertisement -

கேப்டன் பதவியை நிராகரித்தார்

மேலும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் யுஏஇல் ஆசிய கோப்பை டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் துலிப் டிராபி துவங்க இருக்கிறது. எனவே ஆசியக் கோப்பை இந்திய அணிகள் இடம் பெற்ற பெரும்பாலான வீரர்கள் இந்த தொடரில் விளையாட வர மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்பாக துலிப் டிராபியில் மும்பை உள்பட மேற்கு மண்டல அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டன் பொறுப்பு தேடி வந்திருக்கிறது. இந்த நிலையில் தான் நிச்சயம் ஆசியக் கோப்பை இந்திய அணிகள் இடம்பெறுவோம் என்பதால் அதை ஸ்ரேயாஸ் ஐயர் மறுத்துவிட்டார் என செய்திகள் தெரிவிக்கிறது.

- Advertisement -

ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்

இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆசிய கோப்பை இந்திய டி20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில் அவர் தற்போது முழுமையாக மேற்கு மண்டல அணிக்கு விளையாட இருக்கிறார். ஆனால் தன்னிடம் தேடிவந்த கேப்டன் பொறுப்பை கம்பீர் மற்றும் அகர்கர் இருவரையும் நம்பி மறுத்து ஏமாந்து இருக்கிறார்.

இதையும் படிங்க : துலீப் கோப்பை 2025.. இந்திய அணிக்கு திரும்ப போராடும் 3 வீரர்கள்.. வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்களா?

இது குறித்து வெளியான செய்தியில் “முதலில் மேற்கு மண்டல அணிக்கு கேப்டன் பொறுப்பு ஸ்ரேயாஸ் ஐயருக்கு வந்தது. ஆனால் அவர் ஆசியக் கோப்பை தொடரில் விளையாடுவோம் என்று நம்பியதால் அதை மறுத்துவிட்டார். இதற்கு பிறகு நாங்கள் கேப்டன் பொறுப்புக்கு சர்துல் தாகூரை தொடர்பு கொண்டோம். அதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்” என்று கூறப்பட்டு இருக்கிறது.

- Advertisement -