துலீப் கோப்பை 2025.. இந்திய அணிக்கு திரும்ப போராடும் 3 வீரர்கள்.. வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்களா?

0
60

துலீப் கோப்பை 2025 ஆம் ஆண்டு தொடர் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 15ஆம் தேதி வரை பெங்களூரில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பல ஸ்டார் வீரர்கள் பங்கேற்கின்றனர். வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா என அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்கள் இருப்பதால் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம். என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி இந்த தொடரை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பவர் முகேஷ் குமார். 2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறிமுகமான முகேஷ் குமார்,ஒரே ஆண்டில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்றார்.

- Advertisement -

முகேஷ், தீபக் சாகருக்கு வாய்ப்பு:

30 வயதான முகேஷ் குமார் தற்போது ஈஸ்ட் சோன் அணியில் விளையாடுகிறார். முகேஷ் குமார், ஆகாஷ் தீப், சமி உள்ளிட்டவர்களுடன் அந்த அணியில் புதிய பந்தை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதுவரை மூன்று டெஸ்ட் ,6 ஒரு நாள் மற்றும் 17 டி20 போட்டியில் விளையாடியுள்ள முகேஷ் குமார் மொத்தமாக 32 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் தீபக் சாகர். 33 வயதான இவர் தற்போது சென்ட்ரல் சோனில் விளையாடுகிறார். அடுத்த ஆண்டு t20 உலக கோப்பை உள்ள நிலையில் இங்கிலாந்து தொடரில் நெட் பவுலராக பணியாற்றினார். இதுவரை 25 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளும், 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.

- Advertisement -

ரஜத் பட்டிதார்:

இதனால் இவரும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்றால் துலீப் கோப்பையில் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார். துலீப் கோப்பையில் சென்ட்ரல் சோனில் விளையாடுகிற இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற ரஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: யாருக்கிட்ட? உலக சாம்பியன்னா சும்மாவா? தென்னாப்பிரிக்காவை 276 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாதனை

இதனால் இந்த தொடரில் அவர் சிறப்பாக விளையாட வேண்டும். மொத்தமாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் இதுவரை இந்திய அணிக்காக விளையாடி 63 ரன்கள் அடித்துள்ளார். இதனால் பட்டிதார், இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார்.

- Advertisement -