இந்திய கிரிக்கெட்

கம்பீர் நடத்திய 3 நிமிட பேச்சு.. சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது.. உறுதியான தகவல்.. பயிற்சியில் என்ன நடந்தது?

ஆசியக் கோப்பை இந்திய பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் நேற்று பயிற்சியில் நடந்த சம்பவங்கள் அதை உறுதி செய்திருக்கின்றன.

- Advertisement -

தற்போது இந்திய டி20 அணிக்கு துணை கேப்டனாக கில் கொண்டுவரப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக நிச்சயம் அவர் விளையாடும் வாய்ப்பை பெறுவார். அவர் துவக்க வீரராக களம் இறங்கும் பட்சத்தில் சஞ்சு சாம்சங் தன்னுடைய இடத்தை இழக்க வேண்டியது வருகிறது.

ஜிதேஷ் சர்மா பயிற்சி

இரண்டு நாட்களாக பயிற்ச்சியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் ஜிதேஷ் சர்மா தொடர்ந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். குறிப்பாக முழு நீள பேட்டிங் பயிற்சி என்பது அவரை தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கண்காணித்தார்.

இந்த பயிற்சியின் போது ஜிதேஷ் சர்மாவுக்கு சில ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவர் தொடர்ந்து பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டார். இதனால் சஞ்சு சாம்சன் என்ன மாதிரியான பயிற்சிகளை செய்வார்? என்பதை வைத்து அவருக்கு அணியில் இடம் கிடைக்குமா இல்லையா? என்பது முடிவாகும் என சொல்லப்பட்டது.

- Advertisement -

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை

இந்த நிலையில் சஞ்சு சாம்சன் நேற்று விக்கெட் கீப்பிங் பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டார். மேலும் அந்த நேரத்தில் கம்பீர் அவருடன் மூன்று நிமிடம் ஏதோ பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு சஞ்சு சாம்சன் அந்த பயிற்சியை நிறுத்திவிட்டு வெளியேறிவிட்டார்.

இதையும் படிங்க : நான் முழுசா கலந்துக்கல.. நிறைய உழைச்சேன்.. கம்பீர் மீது ஸ்ரேயாஸ் ஐயர் மறைமுக தாக்கு – என்ன நடந்தது?

மேலும் இரண்டு நாட்களாக சஞ்சு சாம்சன் பேட்டிங் பயிற்சி செய்யவில்லை. அவர் விக்கெட் கீப்பிங் பயிற்சி மட்டுமே நேற்று செய்தார். ஆனால் ஜிதேஷ் சர்மா தொடர்ந்து பேட்டிங் பயிற்சி செய்து வருகிறார். எனவே சஞ்சு சாம்சன் முதலில் விளையாட வைக்கப்பட மாட்டார் என்று செய்திகள் உறுதியாகக் கூறுகின்றன.

- Advertisement -
Published by