ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியில் தான் விளையாடிய பொழுது ஒரு கேப்டனாக முழுமையாக ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்பது குறித்து மறைமுகமாக ஸ்ரேயாஸ் ஐயர் கூறியிருக்கிறார்.
மேலும் 2024 ஆம் ஆண்டு கேகேஆர் அணி ஐபிஎல் தொடரை வென்ற பொழுது அதற்கு முழு பெருமையும் கம்பீருக்கு போய் சேர்ந்தது. ஆனால் அணியை களத்தில் வழி நடத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதுவும் கிடைக்கவில்லை. மேலும் அடுத்த ஆண்டு அவரை கேகேஆர் அணி நிர்வாகம் தக்க வைக்கவும் இல்லை.
துரத்திய ரிக்கி பாண்டிங்
இந்த நிலையில் இந்த வருடம் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பெரிய விலை கிடைக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் டெல்லி அணி ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏலத்தில் மிகவும் ஆழமாகச் சென்றது. இருந்த போதும் ரிக்கி பாண்டிங் விடாமல் துரத்தி 26.75 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாகவே ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வாங்கி கேப்டன் ஆக்குவது என முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கேப்டனாக மட்டும் இல்லாமல் பேட்ஸ்மேன் ஆகவும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்து இந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். இது பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் வரலாற்றில் முக்கியமானதாக அமைந்தது.
முழுமையாக கலக்கவில்லை
இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும் பொழுது “நான் ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேன் ஆகவும் அணிக்கு நிறைய கொடுக்கிறேன். பஞ்சாப் எனக்கு பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் என அனைவரிடம் இருந்தும் முழு ஒத்துழைப்பை கொடுத்தது. நான் அணி கூட்டத்தில் பங்களிக்கவும், களத்திற்கு வெளிய முடிவுகளை எடுக்கவும் எனக்கு சுதந்திரம் இருந்தது”
இதையும் படிங்க : ஆசிய கோப்பை.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. கம்பீரின் மும்முனை பிளான்.. எதிர்பார்க்காத திட்டம்
“அதே சமயத்தில் கேகேஆர் அணி கூட்டங்களில் நான் பேச்சுவார்த்தையில் இருந்தேன். ஆனாலும் கூட என்னால் அதில் முழுமையாக கலக்க முடியவில்லை. தற்போது நான் இந்த நிலைக்கு வருவதற்கு மிகவும் கடுமையாக உழைத்து வந்திருக்கிறேன் என்று கம்பீரின் தலையீடு குறித்து மறைமுகமாக பேசியிருக்கிறார்.






