ஆஸ்திரேலிய முதல் டெஸ்ட்.. ரோகித் சர்மா ஆடுவதில் சிக்கல்.. மாற்று வீரராக இளம் வீரருக்கு வாய்ப்பு.. வெளியான தகவல்

0
1043

வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரிலும் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுகிறார் என்று அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

ரோஹித் சர்மா விலக வாய்ப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் விதமாக இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகளும் அதற்கு அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் உலக சாம்பியன்ஷித் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எனவே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக திகழும் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஏதேனும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளிவந்திருக்கிறது. அதைப் பற்றிய முழுமையான தகவல் வெளிவராத நிலையில் சொந்த சூழ்நிலை காரணமாக ரோகித் சர்மா பிசிசிஐயிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

- Advertisement -

இந்திய இளம் வீரருக்கு வாய்ப்பு

இது குறித்து பிசிசிஐ வட்டாரம் கூறுகையில் “ரோஹித் சர்மா விலகுவதற்கான தெளிவான காரணம் கிடைக்கவில்லை. தனிப்பட்ட சூழ்நிலைகளின் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தொடக்கத்தில் முதல் இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது” என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே அப்படி ரோகித் சர்மா விலகும் பட்சத்தில் இந்திய அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்படலாம் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க:310 பந்தில் 300 ஹாரி புரூக்.. இப்பவும் சேவாக் தான் டாப்.. அதிவேகமாக டெஸ்டில் முச்சதம் அடித்த 4 வீரர்கள்

எனவே வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் தேர்வு செய்யப்படாமல் கேப்டனை வைத்து மட்டுமே இந்திய அணி விளையாடியது. மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கில் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க வாய்ப்பு உள்ளது. ரோஹித் சர்மாவுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் அபிமன்யு ஈஸ்வரன் இந்திய உள்நாட்டு தொடரில் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்து இருக்கிறார்.

- Advertisement -