310 பந்தில் 300 ஹாரி புரூக்.. இப்பவும் சேவாக் தான் டாப்.. அதிவேகமாக டெஸ்டில் முச்சதம் அடித்த 4 வீரர்கள்

0
567

பாகிஸ்தானின் முல்தான் நகரில் நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.

அதில் இங்கிலாந்து அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடிய ஹாரி புரூக் முச்சதம் அடித்து டாப் வீரர்களின் பட்டியலில் இணைந்த நிலையில் அவர் இந்தியாவின் வீரேந்திர சேவாக் சாதனையை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஹாரி ப்ரூக் அபாரமான முச்சதம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் ஏழு விக்கெட் இழப்புக்கு 823 ரன்கள் குவித்தது.

அதில் ஜோ ரூட் 262 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்த நிலையில் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி 322 பந்துகளில் 317 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக முச்சதம் அடித்த இரண்டாவது வீரராக இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் மாறி இருக்கிறார். இந்த பட்டியலில் இந்திய அணியின் வீரேந்திர சேவாக் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நம்பர் ஒன் இடத்தில் வீரேந்திர சேவாக்

இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பது ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த மேத்யூ ஹைடன் 2003ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 362 பந்துகளில் தனது முச்சதத்தை பதிவு செய்தார். 400 ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 380 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்ததாக இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் வாலி ஹம்மன்ட் ஆவார். இவர் 1993ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக 355 பந்துகளில் 300 ரன்கள் எட்டினார்.

இதையும் படிங்க:நானும் ரிங்குவும் அடிச்சு ஆடுறுதற்கு முன்னாடி.. இந்த ஒரு விஷயத்தை முழுசா நம்பி இறங்குனோம் – நிதிஷ்குமார் பேட்டி

கிட்டத்தட்ட இவரது சாதனை 75 ஆண்டுகளாக யாரும் முறியடிக்கப்படாத நிலையில் 2008ஆம் ஆண்டு முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் தற்போது இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் 310வது பந்தில் 300 ரன்கள் குவித்து இரண்டாவது வீரராக இடம்பிடித்திருக்கிறார். மொத்தமாக 322 பந்துகளில் 317 ரன்கள் குவித்தார். இறுதியாக இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்திய அணியின் வீரேந்திர சேவாக். 2008ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தனது முச்சதத்தை பதிவு செய்த போது 278 பந்துகளை மட்டுமே சேவாக் எடுத்துக் கொண்டார். மூன்று சதங்களை சேவாக் இரண்டு முறை அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -