இந்திய அணியில் இருந்து வெளியேறிய நட்சத்திர வீரர்.. திடீர் பின்னடைவு.. காரணம் என்ன?

0
17
Surya

இந்திய அணி நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரர் ஒருவர் வெளியேறி இருக்கிறார் என செய்திகள் தெரிவிக்கிறது.

இந்திய அணி தனது கடைசி இரண்டு போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வெல்ல வேண்டும், வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோற்க வேண்டும் இல்லை தென் ஆப்பிரிக்கா அணி அடுத்த இரண்டு போட்டிகளில் தோற்க வேண்டும், அப்பொழுதுதான் அரை இறுதிக்கு தகுதி பெற முடியும் என்கின்ற சூழ்நிலை இந்திய அணிக்கு நிலவுகிறது.

- Advertisement -

இந்திய அணியில் திடீர் குழப்பம்

கடந்த இரண்டு வருடங்களாக இந்திய டி20 அணி அதிரடியாக விளையாடுவதை அணுகுமுறையாக வைத்து செயல்பட்டு வெற்றிகளை குவித்து வருகிறது. ஆனால் தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் அந்த அணுகுமுறை சரிவரவில்லை. உடனடியாக அணுகுமுறையை மாற்ற இந்திய அணி தடுமாறுகிறது.

மேலும் இந்திய அணிகள் சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து வீச வேண்டிய நான்கு ஓவர்கள் பிரச்சனையாக மாறி உள்ளது. இவர்கள் வேகம் குறைவாக வீசிய காரணத்தால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் பெரிய அளவில் ரன் குவித்தது இந்திய அணி தோல்வி அடைய காரணமாக அமைந்தது.

- Advertisement -

வெளியேறிய வீரர்

இந்த நிலையில் இந்திய அணி நாளை மறுநாள் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடுவதற்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முகாமிட்டு பயிற்சி செய்து வருகிறது. தற்போது இந்திய அணியில் இருந்து பினிஷர் ரிங்கு சிங் வெளியேறி உள்ளார் என செய்திகள் கூறுகிறது.

இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட் நாசமடைய கம்பீர்தான் காரணம்.. அவர்தான் இதை உள்ள கொண்டு வந்தார் – அகமத் சேஷாத் கருத்து

ரிங்கு சிங் குடும்ப விஷயம் காரணமாக வெளியேறி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர் திரும்பி வருவாரா? என்பது குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை. ஒருவேளை அவர் விளையாடாவிட்டால் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -