இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் இந்திய அணிக்குள் அரசியலைக் கொண்டு வந்து அதன் நல்ல பிம்பத்தை கலைத்து விட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமத் சேஷாத் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இந்திய அணி கடந்த சில போட்டிகளாக பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்காமல் இருந்து வருகிறது. மேலும் கேப்டன் சூரியகுமார் யாதவ் பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு வீரர்கள் நடந்து செல்லும் பொழுது குல்தீப் யாதவை தள்ளிவிட்ட விவகாரம் சர்ச்சையானது.
சூரியகுமார் இதை செய்தார்
இந்த நிலையில் இந்த சம்பவங்கள் இந்திய கிரிக்கெட்டில் மதிப்பை குறைத்து விட்டதாகவும், அரசியலுக்குள் நுழைந்து பெரிய வெற்றி பெறாத கம்பீர் அதே அரசியலை இந்திய அணிக்குள் கொண்டு வந்து பிம்பத்தை சரித்து விட்டதாகவும் அகமத் சேஷாத் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இதுகுறித்து அகமத் சேஷாத் கூறும் பொழுது “பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு குல்தீப்பை சூரியகுமார் தள்ளிவிட்ட சம்பவம் நடைபெற்றது. இப்போது இதன் காரணமாகவே குல்தீப் யாதவை இந்திய பிளேயிங் லெவனில் சேர்க்கவில்லை என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். இல்லையென்றால் அவர் சேர்க்கப்பட்டு இருப்பார். அவருக்கு போட்டியை வெல்லும் திறன் இருக்கிறது”
கம்பீர் சீரழித்து விட்டார்
“எந்த ஒரு துறையில் நுழையும் பொழுதும் நல்ல கவனம் தேவை. கம்பீர் அரசியலில் நுழைந்தார் ஆனால் அவரால் அங்கு பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. ஆனால் அந்த அரசியலை அவர் இந்திய அணிக்குள் கொண்டு வந்து விட்டார். கம்பீரின் இந்த அரசியல் இந்திய அணியின் பிம்பத்தை நாசம் அடைய வைத்து விட்டது”
இதையும் படிங்க : ஐபிஎல் முதலாளிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.. இவர்களை விடக்கூடாது – மொயின் அலி பேச்சு
“இந்திய அணியின் வளங்கள் சரியாக நிர்வகிக்கப்படவில்லை. கம்பீர் அவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. குல்தீப் போன்ற ஒரு மேட்ச் வின்னர் உங்களிடம் இருக்கும் பொழுது, அவரை கூட ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.






