இந்திய பசங்களுக்கு பயமே கிடையாது.. இங்கிலாந்துல அசத்துவாங்க.. ஆனா இத செய்யணும் – ஏபி டிவில்லியர்ஸ் அறிவுரை

0
294
Gill

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என தான் நம்புவதாகவும், ஆனால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஏபி டிவில்லியர்ஸ் அறிவுரை கூறியிருக்கிறார்.

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்து சென்று ஜூலை 20 முதல் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு இந்திய அணிக்கு இளம் வீரர் சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்திய டெஸ்ட் அணியும் கேப்டனும் மிகவும் இளையவர்கள் என்பதால் சந்தேகங்களும் வேறுவிதமான எதிர்பார்ப்புகளும் நிலவுகிறது.

- Advertisement -

இந்திய வீரர்களுக்கு பயமே இல்லை

இதுகுறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசும்பொழுது “இந்தியா இங்கிலாந்துக்கு வருகை தருவது ஆசஸ் தொடர் போலவே அங்கு இருக்கும். இந்திய டெஸ்ட் அணி ஒரு புதிய தோற்றமுடைய அணி. இந்த அணியை இளம் வீரர்கள் கில் வழிநடத்த போகிறார். ரிஷப் பண்ட் துணை கேப்டனாக இருக்கிறார். நிச்சயம் இந்த வீரர்கள் அனைவருமே அங்கு சோதிக்கப்பட போகிறார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால் இன்றைய இந்திய இளைஞர்கள் துளியும் பயம் இல்லாதவர்கள்”

“நான் இந்திய அணியின் பந்து வீச்சு தாக்குதலில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் சர்துல் தாக்கூர். மேலும் இதில் தாக்கூர் பேட்டிங் செய்யக் கூடியவர் என்று நாம் பார்த்திருக்கிறோம். மேலும் ஆகாஷ் தீப் மற்றும் அர்ஸ்தீப் என இரண்டு சிறந்த பவுலர்கள் இருக்கிறார்கள். இது சிறந்த பந்துவீச்சு வரிசை. இதை நான் ஏன் வலியுறுத்துகிறேன் என்றால் இங்கிலாந்தில் அவர்களுடைய பவுலர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக இருக்கிறார்கள். அதேபோல் நாமும் அவர்களுடைய 10 விக்கெட்டை வீழ்த்த வேண்டும்”

- Advertisement -

என்னுடைய கவலையே வேறு

“மற்றவர்கள் சொல்வது போல இவர்கள் இளமையானவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என்பது உண்மைதான். ஆனா இங்கிலாந்து அணிக்கு எதிராக நிற்பதற்கான திறமை இந்த வீரர்களிடம் இருப்பதாக நான் பார்க்கிறேன். என்னுடைய முக்கிய கவலை என்னவென்றால் இது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர். மிகவும் நீண்ட மராத்தான் போன்றது”

இதையும் படிங்க : 385 ரன்.. 197 ரன் வித்தியாசம்.. அயர்லாந்தை புரட்டி எடுத்த வெஸ்ட் இண்டீஸ்.. தொடரை காப்பாற்றியது

“நீங்கள் ஒரு நல்ல டெஸ்ட் போட்டியை விளையாடி சிறப்பாக முடிக்கலாம். ஆனால் உங்கள் மனம் இரண்டு மூன்று மாதங்கள் இது தொடர்ந்து செல்லும் என்று சொல்லும். நீங்கள் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடுவதை வைத்து எதையும் செய்ய முடியாது. நிறைய கிரிக்கெட் இருக்கும் அதனால் நிறைய சவால்கள் இருக்கும். எனவே நீங்கள் நல்ல டெக்னிக் உடன் இருக்க வேண்டும். மேலும் உங்கள் இயல்பான மனநிலையில் இருந்து மாறக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -