இந்திய கிரிக்கெட்

ரஞ்சியில் அசத்திய ஷமி.. ஆஸி செல்ல முடியுமா?.. பிசிசிஐ விதித்த 2 நிபந்தனைகள்.. வெளியான புதிய தகவல்கள்

தற்போது ரஞ்சி டிராபியில் 19 ஓவர்கள் வீசி நான்கு விக்கெட் கைப்பற்றிய முகமது ஷமி ஆஸ்திரேலியா சென்று இந்திய அணி உடன் இணைவதற்கு பிசிசிஐ இரண்டு நிபந்தனைகளை விதைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடும் ஷமி இரண்டாவது நாளில் 10 ஓவர்கள் வந்த வீசி விக்கெட் இல்லாமல் இருந்தார். மூன்றாவது நாள் திரும்பி வந்து மேற்கொண்டு ஒன்பது ஓவர்கள் வீசி நான்கு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். எனவே அவர் ஆஸ்திரேலியா செல்வாரா? என்கின்ற எதிர்பார்ப்புகள் உருவாகி இருக்கிறது.

போட்டியை பார்த்த இரண்டு முக்கிய நபர்கள்

முகமது ஷமி விளையாடிய இந்த போட்டியை பார்ப்பதற்கு இந்தியத் தேர்வுக்குழு உறுப்பினர் அஜய் ரத்ரா மற்றும் என்சிஏ மருத்துவக் குழு தலைவர் நிதீஷ் படேல் இருவரும் வந்திருந்தார்கள். அவர்கள் இருவரும் முகமது ஷமியின் போட்டி உடல் தகுதி எவ்வாறு இருக்கிறது? அவர் மேற்கொண்டு சிரமப்படுகிறாரா? என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொண்டார்கள்.

மேலும் இவர்கள் இருவரும் முகமது ஷமியின் உடல் தகுதி குறித்து பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு முதலில் தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. நவம்பர் 16ஆம் தேதி ஷமி விளையாடும் டெஸ்ட் போட்டி முடிவுக்கு வருகிறது. இவர்கள் ஷமிக்கு உடல் தகுதி பிரச்சனை இல்லை என அறிக்கை கொடுத்தால், ஷமி உடனடியாக ஆஸ்திரேலியா சென்று பயிற்சி போட்டியில் விளையாடி, முதல் அல்லது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவார்!

- Advertisement -

பிசிசிஐ விதித்த நிபந்தனைகள்

தற்போது பிசிசிஐ மேற்கொண்டு ஷமி செய்வது மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கொண்டு பந்து வீசுவது இரண்டையும் பார்த்து, நாளை போட்டியின் கடைசி நாள் முடிந்த பிறகு, அவருக்கு மீண்டும் ஏதாவது வலி இருக்கிறதா? இல்லை அவர் நன்றாக உணர்கிறாரா? என்று தேர்வு குழு உறுப்பினர் அஜய் ரத்ரா மற்றும் என்சிஏ மருத்துவக் குழு தலைவர் நிதிஷ் படேலைப் பார்த்து அறிக்கை சமர்ப்பிக்க கூறியிருக்கிறது.

இதையும் படிங்க : இந்திய அணி எங்களை பார்த்து அந்த விஷயத்தை காப்பியடிக்குது.. பெரிய சிக்கல் வரப்போகுது – இயான் ஹீலி எச்சரிக்கை

இவர்கள் நாளை முடிவில் முகமது ஷமி குறித்து என்ன தெரிவிக்கிறார்கள் என்பதை பொறுத்து அவர் ஆஸ்திரேலியா செல்வது முடிவாகும். இப்போதைக்கு 95% அவர் ஆஸ்திரேலியா செல்வதற்கு சாதகமான சூழ்நிலையில் இருக்கிறார். மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாவிட்டாலும் கூட இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அளவுக்கு தெரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts