இந்திய அணி எங்களை பார்த்து அந்த விஷயத்தை காப்பியடிக்குது.. பெரிய சிக்கல் வரப்போகுது – இயான் ஹீலி எச்சரிக்கை

0
48
Healy

இந்திய அணி பார்டர் கபாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு தனது பயிற்சி போட்டியை மூடிய மைதானத்தில் நடத்துவது குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் இயான் ஹீலி கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை மேற்கு ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி விளையாட இருக்கிறது. இதற்காக பிசிசிஐ சில முக்கிய புதிய அணுகுமுறைகளை செய்து கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய அணுகுமுறை

இந்திய அணி மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்திருக்கும் பெர்த் மைதானத்தில் முகாம் அமைத்து தனது பயிற்சியை ஆரம்பித்திருக்கிறது. இதே மைதானத்தில் இந்திய ஏ அணிக்கு எதிரான தனது முதல் பயிற்சி போட்டியையும் விளையாட இருக்கிறது. ஆனால் பயிற்சி மற்றும் பயிற்சி போட்டிக்கு பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை.

மேலும் மீடியாக்கள் ட்ரோன்கள் அனுப்பி செய்தி சேகரிக்க முயற்சி செய்ததால் மைதானத்தைச் சுற்றி கருப்பு கவர் வைத்து லாக் செய்திருக்கிறார்கள். மேலும் மைதான ஊழியர்கள் தங்களது செல்போன்களை பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா அணியின் பயிற்சி மற்றும் பயிற்சியில் இந்திய அணி வீரர்களின் பலம் மற்றும் பலவீனம் எதுவும் வெளியில் தெரியக்கூடாது என இந்திய கிரிக்கெட் வாரியம் நினைக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா செய்ததை இந்தியா செய்கிறது

இதுகுறித்து இயான் ஹீலி கூறும் பொழுது ” இந்தியா தற்பொழுது செய்து கொண்டிருப்பதை ஆஸ்திரேலியா இந்தியாவில் செய்தது. மேலும் சில நேரங்களில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிலும் செய்தது. அப்போது பத்திரிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களை ஆஸ்திரேலியா அனுமதிக்கவில்லை”

“நீங்கள் ஆஸ்திரேலியா ஊடகங்கள் மற்றும் ஆஸ்திரேலியா பார்வையாளர்கள் மேலும் இந்திய ரசிகர்களை அனுமதிக்கும் பொழுது, இந்தத் தொடர் உங்களுக்கு ஒரு நீண்ட மகிழ்ச்சி அளிக்கும் அனுபவமாக அமையும்.இந்தியா தங்களை பூட்டி வைத்துக் கொள்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. இது தொடர்ந்தால் இந்தியா அதிகப்படியான கிளர்ச்சியை சந்திக்க வேண்டியதாக அமையும்”

இதையும் படிங்க : 7 ஓவர் 93 ரன்.. மேக்ஸ்வெல் மிராக்கிள் பேட்டிங்.. பாகிஸ்தான் அணிக்கு தொடரும் வினோத சோகம்.. ஆஸி வெற்றி

“இது ஒரு போதும் வேலை செய்யாது. நீங்கள் இப்படி செய்யும் பொழுது உங்களுடைய அணி ரிலாக்ஸ் செய்ய முடியாது. இதனால்மீடியாக்கள் துருவ ஆரம்பிக்கும். இதன் காரணமாக வீரர்களின் ஓய்வு பாதிக்கப்படும். இங்கிலாந்து இப்படி செய்யாத பொழுதும், செய்த பொழுதும் அவர்களுடைய பர்பாமென்ஸில் வித்தியாசம் இருந்தது. எனவே பயிற்சி மற்றும் பயிற்சி போட்டியை எல்லோருக்கும் திறந்து விட்டு வீரர்களை ரிலாக்ஸ் செய்ய விட வேண்டும். இந்த விஷயத்தில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -