வருகிறது டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மாற்றம்.. இனி 2 பிரிவுகளாக பிரிக்கப்படும் அணிகள்.. ஐசிசி தலைவர் ஜெய்ஷா அதிரடி

0
86
ICC Chairman Jay Shah

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது புதிய மாற்றங்கள் நிகழ இருக்கிறது. அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இனி பலமான அணிகள் மட்டுமே தங்களுக்குள் மோதிக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. ஆனால் இதில் நிறைய குறைகள் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக தென்னாப்பிரிக்கா அணி குறைந்தபட்ச போட்டிகளில் விளையாடிவிட்டு ஃபைனலுக்கு சென்று இருக்கிறது.

- Advertisement -

இரண்டு பிரிவுகளாக பிரிக்க திட்டம்

ஆனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் அதிக அளவு போட்டிகளை விளையாடி இருக்கிறது. இதில் சரிசமமான பேலன்ஸ் இல்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் பலமான அணிகள் பலம் குன்றிய அணிகளுடன் மோதினால் போட்டியின் முடிவு ஒருதலைபட்சமாக அமைகிறது என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் மோதினால் முடிவு என்ன ஆகும் என்று ரசிகர்களுக்கு முன்கூட்டியே தெரிந்து விடுகிறது. இதில் எந்த ஒரு சுவாரசியமும் இல்லாமல் இருக்கிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர ஐசிசி இனி இரண்டு பிரிவுகளாக அணிகளை பிரிக்க உள்ளது.

- Advertisement -

எந்த அணிகள் இடம்பெறும்

அதன்படி இந்தியா, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா இங்கிலாந்து தென்னாபிரிக்கா நியூசிலாந்து இலங்கை ஆகிய அணிகள் அனைத்தும் ஒரு பிரிவுகளாகவும், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து போன்ற அணிகள் இரண்டாவது பிரிவாகும் பிரிக்கப்படுகிறது.

இதில் முதல் பிரிவில் யார் கடைசி இடத்தை பிடிக்கிறார்களோ அவர்கள் பலவீனமான அணிகள் உடைய பிரிவுக்கு கொண்டு செல்லப்படுவார்கள். பலவீனமான அணியில் முதலிடத்தில் பிடிக்கும் அணி பலமான அணியின் பட்டியலுக்கு செல்வார்கள். இது தொடர்பாக 2016 ஆம் ஆண்டு ஐசிசி முடிவை வகுத்தது. ஆனால் அதற்கு சிறிய அணிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: 2வது டெஸ்ட்.. 157 ரன்னில் சுருண்டு.. கம் பேக் தந்து ஆப்கான் வெற்றி.. ஜிம்பாப்வே அணி போராடி தோல்வி

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் தற்போது மீண்டும் பிரபலமாகி வரும் நிலையில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஐசிசி யோசித்து வருகிறது என புதிய தலைவராக பொறுப்பேற்று இருக்கும் ஜெய்ஷா கூறியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி டெஸ்ட் கிரிக்கெட் பிழைக்க வேண்டும் என்றால் இது போன்ற நடவடிக்கையை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 2025- 27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள் முடிவடைந்த பிறகு இந்த மாற்றம் கொண்டு வரப்படும் என தெரிகிறது.

- Advertisement -