2வது டெஸ்ட்.. 157 ரன்னில் சுருண்டு.. கம் பேக் தந்து ஆப்கான் வெற்றி.. ஜிம்பாப்வே அணி போராடி தோல்வி

0
257
Afghanistan

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பான கம் பேக் கொடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் ரஷித் கான் அதிரடி பந்துவீச்சில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு கடந்த ஆண்டு இறுதி மாதத்தில் ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தது. இதில் தற்பொழுது மூன்று வடிவ தொடர்களையும் ஆப்கானிஸ்தான் அணி வென்று அசத்தியிருக்கிறது.

- Advertisement -

சுருண்ட ஆப்கானிஸ்தான் அணி

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான அணி வெறும் 157 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக 20 பந்துகளில் ரசித் கான் அதிரடியாக 25 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். பந்துவீச்சில் சிக்கந்தர் ராஸா மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு கிரேஜ் எர்வின் 75 ரன்கள், சிக்கந்தர் ராஸா 61 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி முதல் இன்னிங்ஸில் 243 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி முன்னிலை பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரசித் கான் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

கம் பேக் கொடுத்த ஆப்கானிஸ்தான்

இதைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி சிறப்பான கம்பேக் கொடுத்தது. அந்த அணிக்கு பேட்டிங்கில் ரஹமத் ஷா 139, இஸ்மத் ஆலம் 101 இருவரும் சதம் அடித்து ஆப்கானிஸ்தான் அணியை மீட்டார்கள். ஆப்கானிஸ்தான் 363 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் முசரபாணி ஆறு விக்கெட் கைப்பற்றினார். ஜிம்பாப்வே அணிக்கு 278 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையும் படிங்க : சிட்னியில் ரோகித் பேட்டி கொடுத்த காரணமே இதுதான்.. இப்ப அவர் இதை செஞ்சே ஆகணும் – தினேஷ் கார்த்திக் பேட்டி

இதைத் தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 205 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த பணிக்கு அதிகபட்சமாக கிரேஜ் எர்வின் 53 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் கலக்கிய ரசித் கான் மொத்தம் ஏழு விக்கெட் வீழ்த்தினார். முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டி டிரா அடைந்திருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.

- Advertisement -