ஆசிய கோப்பை அணி தேர்வு.. தலைவலியாகும் 15வது இடம்.. 4 வீரர்கள் போட்டி.. தேர்வுக்குழு முடிவு என்ன?

0
439
Sundar

இந்திய அணி அடுத்து பங்கேற்க இருக்கின்ற ஆசிய கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி தேர்வில் 15வது இடத்திற்கு நான்கு வீரர்கள் போட்டியிடுவதால் பெரிய தலைவலி உருவாகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் வந்த பிறகு டி20 கிரிக்கெட்டுக்கு நிறைய இளம் திறமைகள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இதன் காரணமாக மற்ற வடிவங்களை விட இந்திய டி20 அணிக்கு வீரர்களை தேர்வு செய்வது தேர்வுக் குழுவுக்கு பெரிய சவாலாக மாறி இருக்கிறது.

- Advertisement -

பேட்ஸ்மேனா? ஆல் ரவுண்டரா?

தற்போது ஆசியக் கோப்பை இந்திய அணிக்கு 14 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், மீதமிருக்கும் 15ஆவது இடத்திற்கு முழுமையான பேட்ஸ்மேன்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிங்கு சிங், ஆப் ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரியான் பராக் ஆகியோர் போட்டியிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது இந்தியக் தேர்வு குழுவுக்கு பெரிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது. தேர்வு செய்யப்படும் இந்திய அணியில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள் என்பதால் ஆல்ரவுண்டர்கள் தேவையா? என்ற கேள்வியும் இருக்கிறது. அதே சமயத்தில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரும் ஆப் ஸ்பின்னர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் போட்டியை இறுதிவரை எடுத்துச் செல்கின்ற திறன் படைத்த முழுமையான பேட்ஸ்மேனும் தேவை என்கின்ற நிலை இருக்கிறது.

- Advertisement -

யாருக்கு முன்னுரிமை கிடைக்கும்?

இந்த நிலையில் கம்பீர் ஃபினிஷிங் ரோலுக்கு மட்டும் ஒரு வீரரை தேர்வு செய்ய விரும்பவில்லை எனவும், இதனால் ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு கடினம் என்றும் கூறப்படுகிறது. அதே சமயத்தில் அவர் ஆல்ரவுண்டர்களை விரும்புவதால் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கில் திடீர்னு எங்க இருந்து வந்தாரு?.. ரோகித் டிராவிட்டே அதை செய்யல.. நியாயமா யோசிங்க – ஸ்ரீகாந்த் விமர்சனம்

தேர்வுக்குழு இன்னிங்சை எடுத்துச் சென்று விளையாட கூடிய திறமை படைத்த ஒரு பேட்ஸ்மேன் வேண்டும் என்று விரும்புவதாகவும், இதன் காரணமாக அவர்கள் ஸ்ரேயாஸ் ஐயரை உள்ளே கொண்டு வர நினைக்கிறார்கள் என்றும் புறப்படுகிறது. தற்பொழுது ஸ்ரேயாஸ் ஐயர் வாஷிங்டன் சுந்தர் இடையே போட்டி வந்திருப்பதாக செய்திகள் கூறுகிறது.

- Advertisement -