ஐபிஎல் 2025

நாளை தோனி மீண்டும் கேப்டன் ஆகிறார்.. மைக் ஹசி தகவல்.. ஓய்வு பெறுவதற்கான திட்டமா?.. சிஎஸ்கே ரசிகர்கள் கவலை

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாட இருக்கும் போட்டிக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளதாக பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸி தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் நாளை மதியம் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி துவங்க இருக்கிறது. டெல்லி அணி தங்களுடைய இரண்டு போட்டிகளிலும் வென்று தோல்வி அடையாத அணியாக இருக்கிறது. சிஎஸ்கே அணி தங்களுடைய கடைசி மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் தோற்று வருகிறது.

மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுகிறாரா?

இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் பகுப்பாளரான பிரசன்னா தன்னுடைய டிவிட்டர் பதிவில் நாளை தோனிக்கு கடைசி போட்டியாக இருந்து விடக் கூடாது என்று பதிவிட்டு இருக்கிறார். அவர் பெரும்பாலும் காரணம் இல்லாமல் சொல்லக்கூடிய இடத்தில் இல்லை என்பதால், ஒருவேளை நாளையுடன் ஐபிஎல் தொடரில் சொந்த மைதானத்தில் இருந்து தோனி ஓய்வு பெறுகிறாரா? என்கின்ற சந்தேகங்கள் எழுந்திருக்கிறது.

மேலும் மிக முக்கியமாக நாளைய போட்டியில் மகேந்திர சிங் தோனி கேப்டனாகவும் செயல்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மைக்கேல் ஹஸி தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு இன்னும் கூடுதல் கவலையை உண்டாக்கி இருக்கிறது. குறிப்பாக தோனி ஓய்வு பெறுவதற்காகவே நாளை கேப்டன் பொறுப்பை ஏற்க இருக்கிறார் என ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

- Advertisement -

மைக்கேல் ஹஸி கூறியதின் உண்மை என்ன?

நாளை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக மோதுவதற்கு முன்பாக சிஎஸ்கே தரப்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸி கலந்து கொண்டார். அவர் பேசும் பொழுது “கடந்த போட்டியில் கையில் காயம் அடைந்த எங்களுடைய கேப்டன் ருதுராஜ் நாளை விளையாடுவார் என்று நம்புகிறேன். ஆனால் அவர் விளையாடுவாரா இல்லையா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை”

இதையும் படிங்க : தோனி என் அப்பா மாதிரி.. அதுக்கு முக்கிய காரணம் அவர் செஞ்ச இதுதான் – பதிரனா பேட்டி

“இதுகுறித்து எங்கள் அணியின் கேப்டன் ருதுராஜ் மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் இருவரும்தான் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை காயத்தின் காரணமாக நாளை ருதுராஜ் விளையாட மாட்டார் என்றால், கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செய்வதற்கு எங்கள் அணியில் இளம் விக்கெட் கீப்பர் ஒருவர் இருக்கிறார்” என்று கூறி இருக்கிறார். அவர் நகைச்சுவையாக மகேந்திர சிங் தோனியை கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -
Published by

Recent Posts