தோனி என் அப்பா மாதிரி.. அதுக்கு முக்கிய காரணம் அவர் செஞ்ச இதுதான் – பதிரனா பேட்டி

0
37
Pathirana

சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் மதிஷா பத்திரனா சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தனது தந்தையை போன்றவர் என்று கூறியிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் மதிஷா பத்திரனா தோனியின் செல்லப் பிள்ளையாகவே மாறிவிட்டார். அவருடைய பெற்றோர்கள் தங்களுடைய மகனை பார்த்துக் கொள்ளும்படி அவரிடம் கேட்க, அதற்கு அவர் தான் பார்த்துக் கொள்வதாக முழு உத்தரவாதம் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிஎஸ்கே-வின் முக்கிய வீரரான காரணம்

சிஎஸ்கே அணி நிர்வாகம் இந்திய வேகப்பந்துவீச்சாளரான தீபக் சகரை தக்க வைக்காமல் மதீஷா பத்திரனாவை தக்கவைக்கும் அளவுக்கு முக்கிய வீரராக உருவெடுத்தார். அவர் வேகப்பந்துவீச்சாளராக கையை மிகவும் தாழ்வாக வைத்து வீசக்கூடியவர். இதன் காரணமாக பேட்ஸ்மேன்களுக்கு பந்து எங்கிருந்து வருகிறது என்று பார்ப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது.

மேலும் அவரால் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச முடிகிறது. பந்து அதிகபட்ச வேகத்தில் தாழ்வாக இருந்து வரும் பொழுது பேட்ஸ்மேன்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதன் காரணமாக இவரது சிறப்பை புரிந்து கொண்டு சிஎஸ்கே அணி நிர்வாகம் தொடர்ந்து தக்க வைத்து ஆதரவளிக்கிறது. இன்னொரு பக்கம் தோனியின் ஆதரவு கிடைத்திருக்கின்ற காரணத்தினால் அணியின் முக்கியமான வீரராகவும் மாறி இருக்கிறார்.

- Advertisement -

தோனி என் தந்தையை போன்றவர்

இதுகுறித்து மதிஷா பத்திரனா கூறும்பொழுது ” தோனி என்னுடைய தந்தையை போன்றவர். அவர் எனக்கு சிஎஸ்கே அணியில் நல்ல ஆதரவளித்து வழிகாட்டியாக இருந்து சிறப்பான முறையில் என்னை நடத்திக் கொண்டு வருகிறார். என் வீட்டில் என் தந்தை என்னை எப்படி பார்த்து வழிநடத்துவாரோ அப்படியே செய்கிறார். எனவே கிரிக்கெட்டில் தோனியை என்னுடைய தந்தையாக கருதுகிறேன்”

இதையும் படிங்க :

மதிஷா பத்திரனாவின் தாய் தோனியை பற்றி பேசும்பொழுது “அவரைப் பற்றி மென்மேலும் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவர் எனக்கு கடவுளைப் போன்றவர். என் மகன் அவனுடைய தந்தைக்கு எப்படியான மரியாதையை கொடுப்பானோ அதை தோனிக்கு கொடுக்கிறான். எங்களுக்கு அவர் மிகவும் முக்கியமானவர்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -