இந்தியா பாகிஸ்தான் போட்டியை புறக்கணிக்கும் பிசிசிஐ.. விசித்திரமான முடிவு.. காரணம் என்ன? – வெளியான தகவல்கள்

0
187
Bcci

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியை நூதனமான முறையில் பிசிசிஐ புறக்கணிக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையே அதிகபட்ச பதட்டம் நிலவுகின்ற நேரத்தில் இருநாட்டு கிரிக்கெட் அணிகளும் மோதிக்கொள்ள இருப்பதால் எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் இருக்கின்றன. பாகிஸ்தான் தரப்பில் இந்த போட்டியை அனைவரும் விரும்பும் நேரத்தில் இந்திய தரப்பில் இந்த போட்டியில் நடக்கக்கூடாது என்கின்ற குரல்கள் எழுந்திருக்கின்றன.

- Advertisement -

இந்தியாவில் எழுந்துள்ள எதிர்ப்பு

காஷ்மீரில் விரும்பத்தகாத சம்பவத்திற்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் நாட்டுடன் விளையாட்டு மற்றும் வியாபாரம் என எந்த உறவுகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என இந்தியாவில் இருந்து நிறைய குரல்கள் எழுந்தன. எனவே ஆசியக் கோப்பை தொடர் நடைபெறாது, நடைபெற்றாலும் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய அரசு பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவதற்கு பிசிசிஐ இந்திய அணிக்கு அனுமதி கொடுத்தது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டி இந்திய முன்னாள் வீரர்களை பெரிய அளவில் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. ஹர்பஜன் சிங் இதற்கு நேரடியாகவே எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

புறக்கணிக்கும் பிசிசிஐ

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியை நேரில் பார்ப்பதற்கு பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த அதிகாரிகளும் வர மாட்டார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதற்கு முன்பு இரு அணிகளும் மோதிக்கொண்ட போட்டியின் போது அனைத்து பிசிசிஐ அதிகாரிகளும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இது தான் டா சிறந்த அணி.. ஐபிஎல் ஆல் டைம் அணியை அறிவித்த ராகுல் தேவாடியா?

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசும்பொழுது “இந்திய அரசிடம் அனுமதி பெற்ற பிறகு நாங்கள் இந்தியா பாகிஸ்தான் போட்டியை நடத்த ஒப்புக்கொண்டோம். போட்டியின் போது நாங்கள் கேமராவில் வந்தால், அதை வைத்து எங்களுக்கு எதிரான சூழ்நிலையை உருவாக்க முயற்சிகள் செய்யப்படும். எனவே எங்கள் தரப்பில் இருந்து யாரும் நேரில் போய் போட்டியை பார்க்க மாட்டோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -