இது தான் டா சிறந்த அணி.. ஐபிஎல் ஆல் டைம் அணியை அறிவித்த ராகுல் தேவாடியா?

0
34

அதிரடி ஆல் ரவுண்டர் ராகுல் தேவாடியா, 2020 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ்  சார்பில் களமிறங்கி, ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸ் அடித்து சாதனை படைத்தார். இந்த நிலையில் தனது ஆல் டைம் ஐபிஎல் XI-ஐ தேர்ந்தெடுத்துள்ளார்.

2020-ல்  ராகுல் தேவாடியாவின் அதிரடியால் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து 224 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை எட்ட  உதவியது. இதனை அடுத்து ராகுல் தேவாடியா டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்.ஆர். ஆகிய அணிகளில் விளையாடி , தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி உள்ளார்.

- Advertisement -

பேட்டிங் ஆர்டர்:

ராகுல் தேவாடியாவிடம் தனது ஆல் டைம் ஐபிஎல் XI-ஐ குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், தொடக்க வீரர்களாக, அவர் இந்தியாவின் சிறந்த  பேட்ஸ்மேன்களின் இருவரான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை தேர்ந்தெடுத்தார். கோலி ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் சேர்த்தவர் என்றாலும், ரோஹித் மும்பை இந்தியன்ஸ் அணியை ஐந்து பட்டங்கள் பெற்று தந்துள்ளார்.

3-வது இடத்திற்கு, தேவாடியா ‘மிஸ்டர் ஐபிஎல்’ சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்தார். இதே போன்று
நடு வரிசை யுவராஜ் சிங் மற்றும் தென்னாப்பிரிக்காவின் சிறந்த வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். யுவராஜின் சிக்ஸ் அடிக்கும் திறன் மற்றும் டி வில்லியர்ஸின் 360 டிகிரி பேட்டிங் அவர்களை எந்த சூழ்நிலையிலும் ஆபத்தானவர்களாக ஆக்குகிறது. தேவாடியா 6-வது பேட்ஸ்மேனாக தோனியை தேர்ந்தெடுத்தார்.

- Advertisement -

பந்துவீச்சு படை:



இதே போன்று 7வது வீரராக ஹர்திக் பாண்டியா இடம் பெற்றுள்ளார்.
ஸ்பின் பந்துவீச்சுக்கு, தேவாடியா ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் மேற்கிந்தியாவின் ஸ்பின்னர் சுனில் நாரைய்னை தேர்ந்தெடுத்தார். அதே நேரத்தில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இலங்கையின் யார்க்கர் கிங் லசித் மலிங்காவை வேக பந்துவீச்சுக்கு ராகுல் தேவாட்டியா தேர்வு செய்தார்.

இதையும் படிங்க: ஹனிமூனுக்கு ரிங்கு சிங்கை வெளிநாட்டுக்கு அழைத்து சென்ற நிதிஷ் ராணா? எதுக்கு தெரியுமா?

ராகுல் தேவாட்டியா தேர்வு செய்த அணியில் அவர் கிறிஸ் கெயில், ஆண்ட்ரே ரஸ்ஸல், டேவிட் வார்னர், சூர்யகுமார் யாதவ் மற்றும் ட்வெய்ன் பிராவோ போன்ற பல ஐபிஎல் ஜாம்பவான்களை சேர்க்கவில்லை.
ராகுல் தேவாடியாவின் ஆல் டைம்  ஐபிஎல் XI  :ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஏபி டி வில்லியர்ஸ், எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்ட்யா, ரஷித் கான், சுனில் நாரைன், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா

- Advertisement -