பஞ்சாப் கிங்சுக்கு விதிவிலக்கு.. குறித்த தேதியில் ஐபிஎல்-லை முடிக்க.. புதிய திட்டங்கள்.. நிலவரம் என்ன?

0
483
BCCI

நடப்பு ஐபிஎல் தொடரை ஏற்கனவே குறித்த மே 25ஆம் தேதிக்குள் முடிப்பதற்கு சிறப்பு திட்டங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதட்டத்தின் காரணமாக தற்காலிகமாக ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையே நிலைமை சரியாக இருக்கின்ற காரணத்தினால் விரைவில் ஐபிஎல் தொடரை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் இருக்கிறது.

- Advertisement -

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு விதிவிலக்கு

பஞ்சாப் அணி தன்னுடைய சொந்த மைதானங்களாக பஞ்சாப் முல்லன்பூர் மற்றும் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானங்களை கொண்டு இருக்கின்றது. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் மிக அருகில் பாகிஸ்தான் இருக்கின்ற காரணத்தினால், பஞ்சாப் அணிக்கு எஞ்சி இருக்கும் போட்டிகள் நடுநிலையான ஒரு தனி மைதானத்தில் நடத்தப்படும் என்று தெரிகிறது.

மேலும் பத்து அணிகளில் இருக்கும் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் அனைவருமே தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதனால் மீண்டும் எல்லோரையும் கொண்டு வருவதற்கு பிசிசிஐ சிறப்பு திட்டங்களை தீட்டி வருகிறது.

- Advertisement -

பிசிசிஐ புதிய திட்டம்

தற்பொழுது வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் கிடைக்க வேண்டுமென்றால் ஏற்கனவே குறித்த மே 25ஆம் தேதிக்குள் ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்க வேண்டியது இருக்கிறது. மொத்தமாக இறுதிப் போட்டி வரையில் இன்னும் 16 போட்டிகள் மீதம் இருக்கிறது. இந்த நிலையில் பிசிசிஐ ஒரு நாளில் இரண்டு போட்டிகள் வீதம் நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விராட் ரோகித் மட்டும் இல்லை.. இன்னொரு நட்சத்திர வீரரும் வெளியேற போகிறார் – புதிய தகவல்கள் வெளியீடு

இதன் மூலமாக மீண்டும் அனைத்து வெளிநாட்டு வீரர்களையும் தொடருக்குள் கொண்டு வந்து விட முடியும். இத்துடன் வருகின்ற செவ்வாய்க்கிழமைக்குள் பஞ்சாப் கிங்ஸ் அணியை தவிர மற்ற அனைத்து அணிகளும் தங்களுடைய மொத்த வீரர்களையும் தங்களுடைய சொந்த மைதானத்திற்குள் கொண்டு வர வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் கூறுகிறது. இதன் மூலமாக சீக்கிரத்தில் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது!

- Advertisement -