நாங்கள் தோற்றது கூட அதனால் நல்லதாகத்தான் இருந்தது.. நாங்கள் நிச்சயம் இந்த இடங்களை மேம்படுத்த வேண்டும் – திலக் வர்மா ஒப்புதல் பேச்சு

0
0

​வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில், இந்திய அணியின் பௌலிங் டிபார்ட்மென்டில் சில விஷயங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டியுள்ளது என்று இந்திய அணியின் டி20 வைஸ் கேப்டன் திலக் வர்மா ஒப்புக்கொண்டு பேசியுள்ளார்.

​இந்திய அணி இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் பேட்டிங்கில் 200 பிளஸ் ரன்களை குவித்தது மிகப்பெரிய பாசிடிவ் காரணியாக பார்க்கப்படுகிறது. அணியில் முறையான ஆல்ரவுண்டர் இல்லாத சூழலில், நிதிஷ் ரெட்டி மற்றும் சிவம் துபே இருவரையும் மாறி மாறி பயன்படுத்திய நிலையில், ஐதராபாத்தில் நடந்த போட்டியில் நிதிஷ் ரெட்டி 20 பந்துகளில் 41 ரன்கள் குவித்து முக்கிய கேமியோ ஆடினார்.

- Advertisement -

​அதேபோல இளம் வீரரான நமன் தீர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிக் கன்களுக்கு எதிராக பிரஷர் சூழலில் பௌலிங் செய்து அசத்தினார். பெங்களூரில் நடைபெற்ற கடைசி போட்டியில் 6 பந்துகளில் 24 ரன்கள் விளாசிய நமன் தீர், இந்த தொடரில் முக்கிய விக்கெட்களையும் கைப்பற்றி பேட்டிங் ஆல்ரவுண்டராக தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

​தொடர் முடிவடைந்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பௌலிங் மற்றும் அணியின் செயல்பாடு குறித்து திலக் வர்மா பேசும்போது “பேட்டிங்கில் ஒவ்வொரு போட்டியிலும் நாம் 200 பிளஸ் ரன்களை எடுத்துள்ளோம். அது ஒரு அணியாக நமக்கு பெரிய பாசிடிவ் ஆகும். நமது அணியில் சரியான ஆல்ரவுண்டர் இல்லாததால் நிதிஷ் மற்றும் துபே இடையே மாற்றங்களை செய்தோம், இருவருமே நன்றாக செயல்பட்டனர். நிதிஷ் முக்கியமான ரன்களை சேர்த்தார், துரதிர்ஷ்டவசமாக நாம் அந்த போட்டியில் தோற்றாலும் அது நல்ல அறிகுறி. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிக் கன்களுக்கு எதிராக நமன் பிரஷரில் பௌலிங் செய்ததும் நல்ல விஷயம். ஒரு அணியாக பௌலிங்கில் நாம் சில விஷயங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும். வரவிருக்கும் நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் நமன் தீர் குறித்து திலக் வர்மா பேசும்போது “அவர் லோயர் ஆர்டரில் பேட்டிங் செய்கிறார், அவர் எந்த இடத்தில் பேட்டிங் செய்தால் சரியாக இருக்கும் என்று இப்போது ஜட்ஜ் செய்வது மிகவும் அவசரமான ஒன்று. ஆனால் அவர்களிடம் அதற்கான ஸ்கில்கள் உள்ளன. அவர் எவ்வளவு டேலண்டட் என்பது நமக்கு தெரியும். அவர் எந்த இடத்தில் பேட்டிங் செய்தாலும் அணிக்கு சிறப்பான கேமியோக்களை வழங்குவார் என நம்புகிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -